மஞ்சு வாரியாரின் சினிமா வாழ்க்கையை சீரழித்த அஜித் – நல்லா நடிச்சிட்டு இருந்தவரை இப்படி கெடுத்துட்டாரே!

Author: Shree
12 June 2023, 1:58 pm

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகை, நடன கலைஞர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படம் இவருக்கு அடையாளமாக மாறியது. இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் இருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.

தொடர்ந்து பல வித்யாசமான கதைகளில் நடித்து வரும் மஞ்சு வாரியார் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது தனது அழகழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கு 42 வயதாகிறது என்பதை நம்ப முடியாத அளவுக்கு வியக்க வைப்பார்.

இந்நிலையில் சமீப நாட்களாக மஞ்சு வாரியர் பைக் ரெய்டு செல்லும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த நெட்டிசன்ஸ், நல்லா நடிச்சிட்டு இருந்த உங்கள இப்படி அஜித் கெடுத்து கெடுத்துவிட்டாரே. அவர் தான் விடாமுயற்சி படத்தில் நடிக்காமல் ஊர் சுத்திட்டு இருக்கிறார்னு பார்த்தால் கூட இருப்பவர்களை கெடுத்துவிடுறாரே என கிண்டலாக கூறியுள்ளனர். அஜித் – மஞ்சு வாரியார் இருவரும் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!