தல ஃபேன்ஸ் எல்லோரும் தயாரா இருங்க…. விடாமுயற்சி ரிலீஸ் எப்போ? மாஸ் அப்டேட்!!

Author:
16 September 2024, 8:02 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் அஜித் தற்போது 53 வயதாகியும் தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தில் இருந்து வருகிறார். அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

vidamuyarchi Ajith Kumar

இதில் விடாமுயற்சி திரைப்படம் மும்முரமாக படப்பிடிப்புகள் நடைபெற்று ரிலீசுக்கு ஆக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை பிரமாண்ட நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிகை திரிஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார் .

மேலும், இவர்களுடன் அர்ஜுன் ,ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தை குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளிவந்திருக்கிறது.

vidamuyarchi

இதையும் படியுங்கள்: பாலியல் தொல்லை: அப்படி பண்ண சொல்லி டார்ச்சர் செய்தார் – ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் புகார்!

அதாவது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு. ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் படத்தின் ரிலீஸுக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 305

    0

    0