இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!

Author: Hariharasudhan
25 November 2024, 7:50 pm

இன்னும் 7 நாட்களில் Good Bad Ugly படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெறும் என அதன் தயாரிப்பாளர் கூறியது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், தனது ஆத்மார்த்தமான கார் ரேஸில் பங்கெடுத்துக் கொண்டே, தனது உயிருக்கு உயிரான ரசிகர்களுக்காக ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் குட் பேட் அக்லி (Good Bad Ugly).

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைப்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படத்தின் தமிழ் புரோமோஷன் நிகழ்வில் அஜித் படத்திற்கான அப்டேட் ஒன்று கிடைத்து உள்ளது.

இதன்படி, இது தொடர்பாக விழாவில் பேசிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் நவீன் எர்னேனி “இறுதிகட்ட படப்பிடிப்பை நாங்கள் நெருங்கிவிட்டோம். இன்னும் 7 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது. குட் பேட் அக்லி படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை விரைவில் தெரிவிப்போம்.

GV Prakash in Good Bad Ugly

ஏற்கனவே பொங்கல் வெளியீடு என்று பலமுறை கூறி விட்டோம். அது உறுதி செய்யபட்டது தான். ‘குட் பேட் அக்லி’ படம் அற்புதமாக வந்து உள்ளது. தமிழில் எங்களது முதல் தயாரிப்பு கண்டிப்பாக மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார். இது அங்கிருந்த ரசிகர்களை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் அதிர வைத்து உள்ளது.

அதேநேரம், இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்குப் பதில் இசையமைப்பாளார் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காரணம், கங்குவா படத்தின் விமர்சனமே என்றும் தகவல்கள் கசிகின்றன. இருப்பினும், புஷ்பா 1 படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் தேசிய விருது வாங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொண்டாடப்படும் அமரன்.. பிரம்மாண்ட விழா நடத்தும் படக்குழு : சிறப்பு விருந்தினர் இவருதான்!

மேலும், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் என்ன ஆச்சு என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இறுதியாக, அஜித்குமார் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது எனலாம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 230

    0

    0