அஜித் வாக்கு என்னாச்சு..? மீண்டும் தள்ளிப்போகிறதா விடாமுயற்சி ரிலீஸ்?
Author: Hariharasudhan16 January 2025, 10:00 am
அஜித்குமாரின் விடாமுயற்சி டிரெய்லர் இன்று வெளியாக உள்ள நிலையில், படம் பிப்ரவரியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித்குமார், த்ரிஷா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம், பொங்கல் திருநாளை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் திடீரென பொங்கல் ரேஸிலிருந்து ‘விடாமுயற்சி’ பின்வாங்கியது. எனவே, சிறிய பட்ஜெட் படங்கள் பொங்கல் ரேஸில் கலந்து கொண்டன. இதில், ஷங்கரின் கேம் சேஞ்ஜர் திரைப்படமும் ஒன்று. இந்த நிலையில், துபாய் கார் ரேஸின்போது தனது படங்கள் தொடர்பாக அஜித்குமார் கொடுத்த பேட்டியால், ஜனவரி மாதம் விடாமுயற்சி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, பிப்ரவரி 6ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, விடாமுயற்சி டிரைலர் உடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம், ஏப்ரல் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தெலுங்கில் அறிமுகம் ஆகும் விக்ரம் பிரபு…படத்தின் டீசரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து..!
எனவே, இந்த வருடன் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரைவிருந்து காத்திருக்கிறது. அதேநேரம், இந்த இரண்டு திரைப்படங்களுக்குப் பிறகு அஜித்குமார் கிட்டத்தட்ட 9 மாத இடைவெளி விடப் போவதாகவும் கூறிய நிலையில், அஜித்குமார் ரசிகர்கள் சற்று சோகத்திலும் உள்ளனர்.