’வேண்டுமென்றே ஒரு நாள் சிறை’.. அல்லு அர்ஜூன் பகீர் குற்றச்சாட்டு!

Author: Hariharasudhan
14 December 2024, 9:55 am

ஜாமீன் நகல் நேற்றிரவே கிடைத்தும், இரவு முழுவதும் சிறையில் வைக்கப்பட்டு அல்லு அர்ஜுன் விடுதலை செய்யப்பட்டு இருப்பது சட்டவிரோதமானது என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்: கடந்த டிசம்பர் 5ஆம் தேதி பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்த நிலையில், இந்தப் படத்தின் ப்ரீமியம் ஷோ சந்தியா என்ற தியேட்டரில் திரையிடப்பட்டது.

இந்தப் படத்தை காண ரசிகர்களுள் ஒருவரான ரேவதி, அவரது கணவர் பாஸ்கர் மற்றும் இரு மகன்களுடன் வந்திருந்தார். அப்போது திடீரென அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு சர்பிரைஸ் விசிட் அடித்தார். இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள் அவரைக் காண முண்டியடித்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

Allu Arjun released from jail after got bail

இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் ரேவதியும், அவரது மகனும் சிக்கி மயங்கி உள்ளனர். பின்னர், அங்கிருந்த போலீசார் அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் ரேவதி உயிரிழந்தார். அதேநேரம், அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரசிகையின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த அல்லு அர்ஜுன், அந்த குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாகவும் அறிவித்து இருந்தார். இதனிடையே, அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது இந்த நிலையில், நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: திரை விமர்சனம்:ரசிகர்களை கொண்டாட வைத்ததா..சூது கவ்வும் 2..!

இது தெலுங்கு சினி உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, அல்லு அர்ஜுனுக்கு நேற்று இரவு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை அவர் செஞ்சல்குடா சிறையில் இருந்து வெளியே வந்தார்.

Allu Arjun released from jail after got bail in High Court

மேலும் “செஞ்சல்குடா சிறை நிர்வாகத்திற்கு நேற்று இரவே தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் நகல் கிடைத்துவிட்டது. இருப்பினும், அல்லு அர்ஜுனை சிறையில் இருந்து விடுவிக்கவில்லை. இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லி ஆக வேண்டும்.

ஏனென்றால், ஜாமீன் கிடைத்தும் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமானது. இதற்காக சிறை நிர்வாகத்தின் மீது தகுந்த ச்ட்ட நடிவடிக்கை எடுக்கப்படும்” என அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர் அசோக் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!