கோடிகளை குவிக்கும் அமரன்…. 8வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Author:
8 November 2024, 11:10 am

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த தீபாவளி தினத்தை முன்னிட்டு ஸ்பெஷலாக வெளிவந்த திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படம் மறைந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

amaran

இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் மனைவியாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது .

நாளுக்கு நாள் அமரன் திரைப்படத்தின் வசூல் அமோகமாக இருப்பதாக வெளிவரும் தகவல்கள் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்தின் டார்கெட்டே ரூ. 300 கோடி வசூல் தான் என்றொரு தகவல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸையே வியக்க வைத்திருக்கிறது.

amaran

இந்த நிலையில் அமரன் திரைப்படம் இந்த வாரம் திங்கட்கிழமை நடைபெற்ற வெற்றி விழா மேடையிலே ரூ. ரூ. 150 கோடி வசூலை அள்ளி விட்டதாக சிவகார்த்திகேயனே கூறியிருந்தார். இந்த நிலையில் அமரன் திரைப்படம் 8-வது நாளின் வசூல் படி உலக அளவில் இந்த திரைப்படம் ரூ. 180 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி அமரன் திரைப்படம் 8-து நாளில் தமிழ்நாட்டில் ரூ. 94 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் இதுவரை சிவகார்த்திகேயனின் இந்த திரைப்படம் இந்த அளவுக்கு வசூல் ஈட்டவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் உச்சத்தில் உயர்ந்திருக்கிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 168

    0

    0