தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வரும் அனுஷ்கா செட்டி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளிலும் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
இது தவிர அவர் மலையாளம் மற்றும் ஹிந்தியிலும். சில மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களில் நடித்து அங்கும் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார் நடிகை அனுஷ்கா செட்டி .
திரைப்பட நடிகை ஆவதற்கு முன்னர் யோகா டீச்சராக பணி செய்து வந்தார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்பு கிடைக்க தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
இதனையே 2005ம் சூப்பர் என்ற திரைப்படத்தில் தான் இவர் நடித்து திரைவாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து தெலுங்கில் சில திரைப்படங்கள் நடித்திருக்கும் அவர் 2006 ஆம் ஆண்டு ரெண்டு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் அருந்ததி, பில்லா, வேட்டைக்காரன்,சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால், ருத்ரமாதேவி பாகுபலி தோழா பாகுபலி 2 உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார் அனுஷ்கா .
இவர் வசீகர தோற்றத்தில் நல்ல நேர்த்தியான அழகால் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்து விடுவார். ஆம் தற்போது 43 வயதாகும் நடிகை அனுஷ்கா செட்டி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் இவர் தற்போது “காதி”என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்டர் ரிலீஸ் ஆகி ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் .
இந்த போஸ்டரில் நடிகை அனுஷ்கா செட்டி ரத்த கைகளுடன் கண்ணில் ஆக்ரோஷமான பார்வையில் வழியும் கண்ணீருடன் கையில் சுருட்டு பிடித்துக் கொண்டு மிரட்டலாக இருக்கிறார் .
இந்த போஸ்டரை பார்க்கும்போதே அடுத்த அருந்ததியா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள். இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.