இந்தி ஷோவில் விஜய் பட இயக்குநருக்கு இன்சல்ட்.. எதிர்பார்க்காத ரிப்பீட்.. பாயும் நெட்டிசன்கள்!

Author: Hariharasudhan
16 December 2024, 2:15 pm

ஏ.ஆர்.முருகதாஸ் எனது இதயத்தைப் பார்த்தார், எனது உருவத்தை அல்ல என இந்தி ஷோவில் உருவகேலிக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இயக்குநர் அட்லீ பதிலளித்துள்ளார்.

மும்பை: தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்த அட்லீ, ஜவான் மூலம் பாலிவுட்டிலுக் கொடி கட்டிப் பறந்தார். அந்த வகையில், பாலிவுட் நடிகர் வருண் தவானை வைத்து ‘பேபி ஜான்’ என்னும் படத்தைத் தயாரித்து வந்தார். இயக்குநர் காலீஸ் இயக்கும் இப்படம், 2016ஆம் ஆண்டு தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘தெறி’ படத்தின் ரீமேக் ஆகும்.

கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ள இப்படம், டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளில் அட்லீ உள்பட படக்குழுவினர் மும்பையில் இயங்கி வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் தி கிரேட் இந்தியன் கபில் சர்மா ஷோவில், படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் தொகுப்பாளர் கபில் சர்மா, ‘நீங்கள் ஏதாவது ஸ்டாரைச் சந்திக்க செல்லும் போது, அவர்கள் அட்லீ எங்கே என தேடிக் கேட்டிருக்கிறார்களா?” என சர்ச்சைக்குரிய வகையில், உருவகேலி செய்யும் பொருட்டு கேள்வி எழுப்பினார்.

இதனை உணர்ந்த அட்லீ, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. என்னுடைய முதல் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் தான். அவருக்கு என்னுடைய கதை பிடித்திருந்தது. எனது உருவத்தைப் பார்க்காமல் என்னுடைய இதயத்தை அவர் பார்த்தார்’ என பதிலடி கொடுத்து உள்ளார்.

Atlee body shaming in Kapil Sharma Show

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு, உருவகேலி செய்பவர்களுக்கு செருப்படி என்னும் வகையில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இதில் விஜய் ஸ்டைலில் அட்லீ கூறிய குட்டிக்கதையும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அரசு சொத்தை விலைக்கு கேட்டது ஒரு காமெடி.. விக்னேஷ் சிவன் புது விளக்கம்!

அட்லீ குட்டி ஸ்டோர்: அதில், “பணக்கார ஒருவர், குளிரில் நடந்து சென்ற ஏழையப் பார்க்கிறார். அவரிடம், உங்களுக்கு போர்வை இல்லையா எனக் கேட்கிறார். எனவே, தான் எடுத்து வருவதாக அந்த பணக்காரர் சொல்கிறார். ஆனால், வீட்டுக்குச் சென்றதும், அந்த பணக்காரர் ஏழையை மறந்துவிட்டார்.

மறுநாள் அந்த பணக்காரருக்கு, தான் கொடுத்த உறுதி நினைவுக்கு வர ஏழையைச் சென்று பார்க்கிறார். ஆனால், அங்கு அவர் இறந்திருக்கிறார். இதில் இரண்டு நீதிகள் உள்ளன. ஒன்று, யாருக்கும் வாக்குறுதி கொடுக்கக்கூடாது. மற்றொன்று, நம் வாழ்வில் சம்பந்தமே இல்லாத நபரை எல்லாம் நம்பி இருந்துவிடக்கூடாது” என்றார்.

  • Actor Soori new film Maaman update பாலா சிஷ்யன் பாணியில் சூரி.. பிரபல நடிகையுடன் வெளியான முக்கிய அப்டேட்!
  • Views: - 60

    0

    0

    Leave a Reply