கீர்த்தி சுரேஷா இது? என்னடா பண்ணி வச்சீங்க? “பேபி ஜான்” ட்ரைலர் பார்த்து ரசிகர்கள் ஷாக் !

Author:
5 November 2024, 8:48 pm

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மலையாளம். தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இதனுடையே அட்லீ இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி வரும் பேபி ஜான் திரைப்படத்தில் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்கள் வெளியாகி பேசும் பொருளாகி இருக்கிறது.

keerthy suresh

இந்த திரைப்படம் விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமைக்காக உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சமந்தா கேரக்டரில் நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாக அதில் கீர்த்தி சுரேஷ் முகத்தை பார்த்து தென்னிந்திய ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிவிட்டனர் .

இதை பார்த்தால் கீர்த்தி சுரேஷ் என்று தெரியவில்லையே பிளாஸ்டிக் சர்ஜரி செய்த முகம் மாதிரி இருக்கு எங்க தலைவி என்னடா பண்ணி வச்சீங்க என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் . இந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது தவிர கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ரிவால்வர் ரீட்டா, கன்னிவாடி ஆகிய படங்கள் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Baby John - Taster Cut | Atlee | Varun Dhawan, Keerthy Suresh, Wamiqa G, Jackie Shroff | 25th Dec
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?
  • Close menu