இந்த முறை டம்மி தான்…. பிக்பாஸ் சீசன் 8ல் யார் யார் தெரியுமா? முழு Contest லிஸ்ட் இதோ!

Author:
5 October 2024, 12:56 pm

நாளை முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்க இருக்கும் நிலையில் இதன் சுவாரசியத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள். குறிப்பாக இந்த முறை விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை நடத்த உள்ளதால் அவர் எப்படி தொகுத்து வழங்கப் போகிறார்? இதில் அவர் சரிப்பட்டு வருவாரா? என்பது ஒரு ரசிகர்களின் கேள்வியாகவும் ஆர்வம் அதிகரித்தும் இருக்கிறது.

மிகப்பெரிய சீனியர் நடிகரான கமல்ஹாசனே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சண்டை சர்ச்சை உள்ளிட்டவற்றை தாக்கு பிடிக்க முடியாமல் திணறுவார். அப்படி இருக்கும் சமயத்தில் விஜய் சேதுபதி இதையெல்லாம் எப்படி கடந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற ஒரு கேள்வி எழுந்திருக்கிறது.

bigg boss 8

பல கேள்வி மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் வெளிவந்த இந்த சீசனின் ப்ரோமோ வீடியோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. குறிப்பாக இதன் ப்ரோமோ வீடியோவில் விஜய் சேதுபதி மிகச் சிறப்பாக பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலானது .

இதையும் படியுங்கள்: இது எங்க போய் முடியப்போகுதோ…? ராபர்ட் மாஸ்டருடன் பிறந்தநாள் கொண்டாடிய வனிதா!

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் படி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற…

vijay sethupathi big boss
  1. ஷாலின் ஜோயா,
  2. சீரியல் நடிகை தர்ஷா குப்தா,
  3. சீரியல் நடிகை அன்ஷிதா,
  4. நடிகையும் டான்சருமான சுனிதா,
  5. நடிகை சஞ்சனா,
  6. சீரியல் நடிகை பவித்ரா ஜனனி ,
  7. தொகுப்பாளினி ஜாக்குலின்,
  8. நடிகர் சந்தோஷ் பிரதாப்,
  9. சீரியல் நடிகர் விஜய் விஷால்,
  10. நடிகர் கோகுல்நாத்,
  11. தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகர் தீபக்,
  12. 12 . சீரியல் நடிகர் அருண்,
  13. சீரியல் நடிகர் அர்னவ் ,
  14. ராப் பாடகர் பால் டப்பா,
  15. மாடல் அழகிய சௌந்தர்யா நஞ்சுண்டன்,
  16. சீரியல் நடிகரும் திரைப்பட நடிகரும் ஆன ரஞ்சித்,
  17. சினிமா தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர்,
  18. நடிகை ஐஸ்வர்யா

உள்ளிட்டோர் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக சமீபத்திய தகவல் ஒன்று கசிந்திருக்கிறது. இதில் யாரும் பெரிதாக எதிர்பார்த்தது போல் இல்லை என்பதே பரவலான கருத்தாக இருக்கிறது. இருந்தாலும் இது உறுதிப்படுத்தாத தகவல் பொறுத்திருந்து பார்ப்போம் யார் யார் போட்டியாளர்கள் என்று….

  • Bayilvan talk about Vijay Sethupathi விஜய் சேதுபதிக்கு லக் அடிக்க காரணமே அவங்கதான்.. பிரபலம் சொன்ன உண்மை!.
  • Views: - 271

    0

    0