சினி அப்டேட்ஸ்

மஞ்சள் வீரன் மெண்டல் வீரன் ஆன தருணம்…. பூஜையிலே இம்புட்டு அளப்பறையா?

தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும் நடித்து பெருமளவில் பிரபலமானவர் தான் கூல் சுரேஷ். இவர் 2001 ஆம் ஆண்டில் சுரேஷ் சாக்லேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதில் அவர் கல்லூரி ரவுடியாக நடித்திருப்பார் .

மேலும், காக்க காக்க, தேவதை கண்டேன், திருடா திருடி, சிங்கம் புலி, காதல் அழிவதில்லை, பம்பரக் கண்ணாலே, பரமசிவம், பச்சைக்கிளி முத்துச்சரம், தீபாவளி ,தொட்டால் பூ மலரும், வேங்கை, சந்திரமுகி 2. உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் குணச்சித்திர நடிகராகவும் , துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து அசத்திருக்கிறார் .

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி இருந்தார். பொதுவாக கூல் சுரேஷ் எந்த ஒரு திரைப்படம் வெளியானாலும் அந்த திரைப்படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப வித்யாசமான கெட்டப்பிலோ அல்லது ஏதேனும் அந்த படம் சம்பந்தப்பட்ட பொருட்களுடன் சென்று அங்குள்ள அனைவரையும் வியப்பில் அழுத்துவார்.

அதாவது, விஜய்யின் கோட் திரைப்படத்திற்கு போகிறார் என்றால் அவர் ஒரு ஆடு உடன் சென்று அங்கு படத்தை பார்ப்பார். இப்படி அவர் பல படங்களுக்கு செய்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார். இதனால் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பேசப்படும் நடிகராகவும் கூல் சுரேஷ் வலம் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் கூல் சுரேஷ் தற்போது ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார்.

ஆம், அதாவது பிரபல YouTubeரும் , சர்ச்சைக்குரிய. நகரமான டிடிஎப் வாசன் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்த திரைப்படமான மஞ்சள் வீரன் திரைப்படத்தில் அவர் விலகியதை அடுத்து தற்போது அந்த ரோலில் நடிகர் கூல் சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இன்று படத்திற்கான பூஜை போடப்பட்டது. இதில் கூல் சுரேஷ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது போல் தெரிகிறது. அந்த படத்தின் பூஜையில் வழக்கம் போல கொஞ்சம் ஓவராக பேசி அலப்பறை செய்தார் கூல் சுரேஷ். நீங்க என்ன நினைக்கிறீங்களோ அது தான்…. உங்க மனசுக்குள்ள ஒன்னு நினைப்பீங்க இல்ல அதுதான் இது….. அது என்ன அப்படிங்கறதை விரைவில் உங்களுக்கு செய்தி வரும் wait and see .

மஞ்சள் வீரனே வா… மாமன்னரே வா….. மகாதேவனே மாமல்லபுர சிற்பமே வா…. மதுரையின் வீரமே…. மங்காத செல்வமே வா…. மங்கையர்களின் இளவரசனே வா…. இப்படி பல செல்வங்களுக்கு சொந்தக்காரர் செந்தில் செல்வம் அவர்கள். இதற்கு மேல் சொன்னால் உங்களுக்கு என்ன விஷயம் என்று தெரிந்துவிடும் பொறுத்திருந்து பாருங்கள் எனக்கூறி ஓவர் அலப்பறை செய்து பேசிய இந்த வீடியோ இணையத்தில் வெளியாக நெட்டிசன்ஸ் பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

அதாவது “மஞ்சள் வீரன் மெண்டல் வீரன் ஆன தருணம்” என்றெல்லாம் அவரை ட்ரோல் செய்து…. இவனையெல்லாம் நம்பி படத்தை எடுக்குறாங்களே அவங்கள சொல்லணும் என விமர்சித்த வருகிறார்கள் இதுவும் அந்த வீடியோ:

Anitha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.