மட்டற்ற மகிழ்ச்சி….. நடிகர் அஜித்திற்கு துணை முதலமைச்சர் வாழ்த்து!

Author:
30 அக்டோபர் 2024, 10:48 காலை
ajith
Quick Share

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக உயர்ந்த அந்தஸ்திலிருந்து வரும் நடிகர் அஜித் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ajith

இந்த திரைப்படங்கள் விரைவில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. நடிகர் அஜித் எப்போதுமே திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி தனக்கு பிடித்தமான வேலைகளில் அதிக கவனம் செலுத்துவார். அந்த வகையில் கார் ரேஸ், பைக் ரேஸ் மற்றும் வேர்ல்டு டூர் உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் மற்றும் ஈடுபாடு கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்.

அந்த வகையில் உலக அளவில் சிறப்புக்குரிய கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள நண்பர் அஜித்குமாருக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆம் நடிகர் அஜித் உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ளார்.

udhayanidhi stalin

இது குறித்து கூறியுள்ள அவர் தமிழ்நாட்டு விளையாட்டு துறையின் ‘லோகோ’வை அஜித் ரேஸிங் யூனிட்டின் கார், ஹெல்மெட் மற்றும் உபகரணங்களில் காட்சிப்படுத்தி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

  • விஜய் சொன்னது சரிதான்.. ஜெயக்குமார் போடும் கணக்கு!
  • Views: - 34

    0

    0

    மறுமொழி இடவும்