3 வது முறையாக எஸ்கேப் ஆன தனுஷ் – ஐஸ்வர்யா – விவாகரத்து வேண்டாம்னா சொல்லிட்டு போங்கைய்யா!

Author:
2 November 2024, 3:56 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள்.

dhanush-aishwarya

தோலுக்கு மேல் மகன்கள் வளர்ந்து விட்ட நிலையில் தொடர்ந்து தனுஷ் வெற்றி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாகவும் டாப் அந்தஸ்திலும் இருந்து வருகிறார். இதனிடையே ஐஸ்வர்யா இயக்குனராக சில திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமா மக்களின் கவனத்தில் இருந்து வருகிறார்.

விஷயம் இப்படியாக இருந்து வந்த சமயத்தில் திடீரென இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விடப் போவதாக அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்தனர் .கடந்த 2002 ஆம் ஆண்டு தான் இவர்கள் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் நிரந்தர பிரிவு இல்லை இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என பேசப்பட்டு வந்தது.

ஆனால் இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 7ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் இருவருமே ஆஜராகவில்லை.

பின்னர் வழக்கு விசாரணை அக்டோபர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அன்றும் இவர்கள் இருவரும் ஆசராகவில்லை. பின்னர் நவம்பர் 2ம் தேதி ஆன இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் இந்த விசாரணையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் மூன்றாவது முறையாக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

aishwarya dhanush

அதையடுத்து இந்த வழக்கு நவம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததோடு அடுத்த விசாரணைக்கு கட்டாயம் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுருக்கிறார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்கு இஷ்டம் இல்லை என்றால் இருவரும் சேர்ந்து வாழ வேண்டியது தானே… ஏன் இப்படி சட்டத்தையும் வழக்கறிஞர்களையும் காக்க வைக்கிறீர்கள்? என நெட்டிசன்ஸ் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் கேள்வி எழுப்பி விளாசியுள்ளனர்.

இவர்கள் இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்து விசாரணைக்கு ஆஜராகாததால் இருவரும் சேர்ந்து வாழ முடிவில் இருப்பது ஓரளவு உறுதி செய்து இருக்கிறது. எது எப்படியோ நல்ல செய்தி வந்தால் போதும் என தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 97

    0

    0