ரஜினி உடல்நலக்குறைவு.. தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைய முடிவு? கோர்ட்டில் நடந்த டுவிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2024, 8:12 pm

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

ரஜினியின் மூத்த மகள் நடிகர் தனுஷை காதலித்து கரம் பிடித்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த ஜோடி, ஜனவரி 2022ஆம் ஆண்டு பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர். இது இரு குடும்பத்தினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

திரைத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். அவ்வப்போது மகன்களின் பள்ளி விழாக்களில் தென்பட்டு வந்தனர்.

Rajini Dhanush

இந்த நிலையில் இருவரின் விவாகரத்து வழக்குகள் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பல நல நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஆஜராக வில்லை. இதனால் வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரிந்து வாழ ஆசைப்படும் இருவரும், நேரில் ஆஜராகாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் ரஜினியின் உடல்நலக்குறைவு காரணமாக ஐஸ்வர்யா வராமல் இருந்திருப்பார் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் மனஉளைச்சல்தான் என்பதால், மீண்டும் தனுஷ் – ஐஸ்வர்யா இணைந்து வாழ முடிவு செய்துள்ளார்களோ என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 247

    0

    0