அமரன் வெற்றி கண்டு ஆடிப்போன தனுஷ்… ஓடிப்போய் வாய்ப்பு கேட்டாரா? பூஜையுடன் துவங்கிய புதுப்படம்!

Author:
9 November 2024, 11:16 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்தில் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து இருக்கிறார்.

ஆம் அவரின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தற்போது கமிட்டாகி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியிருக்கிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அமரன் திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்தவர் ராஜ்குமார் பெரியசாமி.

அந்த திரைப்படம் முழுமையாக வெற்றி அடைவதற்குள் அடுத்த படத்தை துவங்கிவிட்டார் இயக்குனர். ஆம் அதுவும் நடிகர் தனுஷுடன் தானாம். இது கோலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பான விஷயமாக தற்போது பேசப்பட்டு வருகிறது.

dhanush

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் அமரன் திரைப்படத்தை தொடர்ந்து அதன் வெற்றியை தானம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணி ராஜ்குமார் பெரிய சாமியுடன் கைகோர்த்து இருக்கிறாரா தனுஷ்? என்ற ஒரு கேள்வி எழுந்திருக்கிறது .

முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இடையே மிகப் பெரிய பிரச்சனை நிலவி வந்ததாகவும் இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக பெரும் போட்டி இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இப்படி இருக்கும் சமயத்தில் மீண்டும் அந்த தொழில் ரீதியான போட்டி இருப்பது உண்மைதான் என்பதை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் நடிகர் தனுஷ் சிவகார்த்திகேயனின் வெற்றிப்பட இயக்குனருடன் கைகோர்த்திருப்பதன் மூலம் உறுதி செய்துள்ளது.

நடிகர் தனுஷின் 55 வது திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டதாகவும் அதன் புகைப்படங்களுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர் பட குழுவினர் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது கூடிய விரைவில் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 153

    0

    0