இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!

Author: Hariharasudhan
29 December 2024, 5:13 pm

சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகவில்லை, இது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என இயக்குநர் பாலா கூறியுள்ளார்.

சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி நடித்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற பொங்கல் தினத்தை ஒட்டி ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, பாலா 25 என்ற விழாவும், ஆடியோ விழாவும் ஒன்றாக அமைந்தது.

ஆனால், இப்படத்திற்கு முதலில் சூர்யா ஒப்பந்தமானார். இதனுடைய அதிகாரப்பூர்வ போஸ்டர்கள், BTS புகைப்படங்கள் என வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், திடீரென இப்படத்தில் தான் நடிக்கவில்லை என சூர்யா அறிவித்தார். இதற்கு பாலா மீது எதிர்ப்பு கருத்துகளை ரசிகர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ள இயக்குநர் பாலா, “அருண் விஜய்க்காக நான் கதையை மாற்றவில்லை. அதே கதை தான். அதேநேரம், இது சூர்யா விலகிய படம் அல்ல. நாங்கள் இருவருமே பேசி முடிவெடுத்து, மற்றொரு படம் செய்து கொள்ளலாம் எனத் தீர்மானித்தோம்.

Vanangaan Suriya Movie

சூர்யாவை வைத்து நிஜமான இடங்களில் என்னால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. சுற்றுலாத் தலமான இடத்தில் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தும்போது கூட்டம் அதிகமாக கூடுகிறது. எனவே, சூர்யா விலகிவிட்டார் என்றெல்லாம் கிடையாது. இருவரும் பேசி எடுத்த முடிவு தான் அது. இப்போதும் அதே உறவு தான் எங்களுக்குள் நீடிக்கிறது.

இதையும் படிங்க: அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. ஒன்றாகிய ராமதாஸ் – அன்புமணி.. அப்போ முகுந்தன்?

நான் தனிப்பட்ட முறையில் ஏதேனும் தவறு செய்திருந்தால், அதனை கண்டிக்கக் கூடிய உரிமையை சூர்யாவுக்கு அதிகமாகவே நான் கொடுத்து உள்ளேன்” எனத் தெரிவித்து உள்ளார். தற்போது, இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், சூர்யா ரசிகர்கள் சாந்தமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பாலா கூறுவதை நம்ப முடியவில்லை என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Rajinikanth New Year wish பாட்ஷா ஸ்டைலில் புத்தாண்டு வாழ்த்து: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 69

    0

    0

    Leave a Reply