சீயான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகி வெற்றிநடைபோட்ட திரைப்படம் தான் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இடையில் உருவாகி வந்த இந்த திரைப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஜி வி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகிய தங்கலான் திரைப்படம் சுதந்திர தின கொண்டாட்டமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிகளை குவித்தது.
அதாவது, தங்கலான் திரைப்படத்தில் முதலில் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டது நடிகை மாளவிகா மோகனன் இல்லையாம். இப்படத்தின் முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா தான் ஆரத்தி கேரக்டருக்கு இவர் பக்காவாக பொருந்தி இருப்பார் என நினைத்து இயக்குனர் அணுகி இருக்கிறார்.
ஆனால், அந்த நேரத்தில் ரஷ்மிகா புஷ்பா 2 படத்தில் தேதி இல்லாமல் படுபேசியாக நடித்துக் கொண்டிருந்ததால் தங்களான் படத்தின் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: தளபதி 69 படத்தில் இணையும் மாஸ் வில்லன் நடிகர்.. யார் தெரியுமா
இந்த கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆரத்தி கேரக்டரில் நடிகை மாளவிகா மோகன் மிகச்சிறப்பாக நடித்து கையாண்டு இருக்கிறார். ஒருவேளை ராஷ்மிகா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் அவர் அளவுக்கு நடித்திருப்பாரா என்பது சந்தேகம்தான் எனவே மாளவிகா தான் பெஸ்ட் என கூறி வருகிறார்கள்.