கடந்த இரண்டு நாட்களாக நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தியின் விவாகரத்து விவகாரம் தான் சமூக வலைதளங்கள் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர்களின் விவாகரத்துக்கு பல்வேறு விதமான காரணங்கள் தொடர்ச்சியாக கூறப்பட்டு வரும் நிலையில் இவர்களின் நெருங்கிய வட்டாரம் பல்வேறு விதமான புதிய தகவல்களை பரப்பி மேலும் இந்த விஷயத்தில் பல சந்தேகங்களை கிளப்பி இருக்கிறார்கள்.
சினிமா துறையை பொறுத்தவரை நைட் பார்ட்டிகளுக்கு செல்வதெல்லாம் மிகவும் சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. நைட் பார்ட்டி, இரவு விருந்து சரக்கு, போதை விருந்து உள்ளிட்டவற்றில் நடிகர் நடிகைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். கணவன் மனைவியாக ஆகிவிட்ட பின்னரும் இதை ஒருவருக்கொருவர் கண்டுகொள்ளாமல் இருப்பதே சினிமாவை சார்ந்த பிரபலங்களின் கலாச்சாரமாக இருந்து வருகிறது.
அப்படித்தான் தான் நைட் பார்ட்டிகளுக்கு செல்வதை தன்னுடைய கணவர் ஜெயம் ரவி கண்டும் காணாமல் இருந்து விடுவார் என நினைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஆர்த்திக்கு அதுவே பெரிய வினையாக மாறிவிட்டது. குடும்பப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்து வந்த ஆர்த்தி பின்னர் தன் தோழிகளுடன் சேர்ந்து நைட் பார்ட்டிக்கு மது விருதுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் .
இது ஜெயம் ரவிக்கு கொஞ்சம் கூட பிடிக்காமல் போய்விட்டது. இதனிடையே தொடர் தோல்வி படங்களால் மனைவி ஆர்த்தி வீட்டில் தன்னை மதிப்பதில்லை என்றும் படத் தோல்வியை சந்தித்ததால் மன அழுத்தத்தில் ஜெயம் ரவி இருந்துவந்தாராம். அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே ஈகோ பிரச்சனையின் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என வெளிவரும் தகவல்கள் கூறுகிறது.
- இதையும் படியுங்கள்:நைட் பார்ட்டியில் அவருடன்…. இரவு 1 மணிக்கு கதவு தட்டி – ஆர்த்தியின் அட்டூழியங்கள்!
ஆனால், மனைவி ஆர்த்தியோ இந்த பிரச்சனையை திசை மாற்றம் விதமாக ஜெயம்ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வேறொரு நடிகையுடன் தகாத உறவில் இருப்பதாக வெளிவந்த கிசுகிசு செய்திகள் குறித்து தொடர்ந்து அவரை சந்தேகித்து கேள்வி எழுப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது .
இதனால் இருவருக்கு இடையே மிகப்பெரிய அளவில் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்தை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இது குறித்து தன்னுடைய அறிக்கையில் 15 வருட திருமண பந்தத்தில் ஒரு நிமிடம் கூட என்னால் இது போன்ற ஒரு முடிவை யோசித்து கூட பார்க்க முடியவில்லை.
ஆனால், ஜெயம் ரவி துணிந்து விவாகரத்தை அறிவித்து விட்டார். அவரால் எப்படி முடிந்தது என்று என்னால் இப்போது வரைக்கும் நம்ப முடியவில்லை. இனி என்னுடைய குழந்தைகள் யாரை அப்பா என்று அழைப்பார்கள்? என தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார். மேலும் ஜெயம் ரவியை இப்படி ஒரு முடிவு எடுக்கத் தூண்டி விட்டது யார்? என மனைவி ஆர்த்தியை போன்றே ரசிகர்கள் எல்லோருக்கும் கேள்வி எழுந்துள்ளது.