திரிஷாவின் பிரம்மாண்ட வீட்டை விலைக்கு வாங்கிய பிரபல நடிகர்!

Author:
13 September 2024, 3:59 pm

நடிகை திரிஷா வயது 41 ஆகியும் கூட தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்திருக்கும் கோட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

Trisha

இது தவிர அவர் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படியாக திரிஷா தொடர்ச்சியாக மார்க்கெட்டை பிசியாக வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை திரிஷா சென்னையில் வசித்து வந்த மிகப்பெரிய பிரமாண்ட வீட்டை காலி செய்துவிட்டு தற்போது வேறொரு இடத்திற்கு குடிபெயர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

திரிஷா வசித்து வந்த அந்த வீட்டை பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகரான பானு சந்தர் பெருந்தொகை கொடுத்து விலைக்கு வாங்கி இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: தினமும் சண்டை தான்…. ஆர்த்தி ரொம்ப மோசம், ஜெயம் ரவி நல்லவர் – மாமியாரே இப்படி சொல்லிட்டாங்களே!

இவர் தமிழில் நடிகர் பானு சந்தர் தமிழில் மூடுபனி மற்றும் அருண் விஜய்யுடன் ஓ மை டாக் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!