ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…
Author: Prasad31 March 2025, 3:44 pm
சிக்கந்தரின் நிலைமை?
கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “சிக்கந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சல்மானின் வழக்கமான ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள “சிக்கந்தர்” நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்களிடையே அந்தளவிற்கு வரவேற்பு இல்லை. அந்த வகையில் இத்திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிய வருகிறது. படத்தில் சல்மான் கானின் ஆக்சன் காட்சிகள் மாஸ் ஆக இருப்பதாகவும் ஆனால் திரைக்கதை பலவீனமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளிவருகின்றன. இந்த நிலையில் சல்மான் கான் பொதுவெளியில் ராஷ்மிகா மந்தனாவை தரதரவென இழுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பொதுவெளியில் இப்படியா?
ராஷ்மிகா மந்தனா காருக்குள் ஏறப்போக அவரை தரதரவென வலுக்கட்டாயமாக இழுத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கச்சொன்னார் சல்மான் கான். இந்த நிகழ்வுதான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு நடிகையிடம் பொதுவெளியில் இப்படியா நடந்துகொள்வது” என ரசிகர்கள் பலரும் சல்மான் கானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். “Good Boy” திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ராஷ்மிகா, அதனை தொடர்ந்து “மிஷன் மஜ்னு”, “ச்சாவா” போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன் பின் “சிக்கந்தர்” திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா அதனை தொடர்ந்து பாலிவுட்டில் “தாமா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் “சிக்கந்தர்” திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ஆகஸ்து மாதம் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.