தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

Author: Prasad
31 March 2025, 6:15 pm

தனுஷுக்கு எதிராக அறிக்கை

தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. இதனிடையே சில நாட்களாகவே தனுஷிற்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குமிடையே பிரச்சனைகள் நிலவி வருகின்றன. 

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து தனுஷ் முன்பணம் வாங்கிவிட்டு நடித்துக்கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இது தொடர்பான விவகாரங்கள் பல நாட்களாக செய்திகளாக வலம் வந்தபடி இருந்தன. இந்த நிலையில் தற்போது ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான கலைச்செல்வி தனுஷிற்கு எதிராக வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

five star creations report against dhanush viral on internet

மேலிடம் உத்தரவு?

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸின் பங்குதாரரான கலைச்செல்வி தனது ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸின் சமூக வலைத்தள கணக்கின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரு. ஆர்.கே.செல்வமணி அவர்களுக்கு, 06.09.2024 அன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பங்குதாரர் எற முறையில் நான் கலந்துகொண்டு திரு.தனுஷ் அவர்கள் எங்களிடம் ஆறு வருடங்களுக்கு முன் முன்பணம் பெற்றுக்கொண்டு இன்றுவரை கால்ஷீட் தரவில்லை என்றும் அதனால் நாங்கள் அனுபவிக்கும் மனவேதனைகளையும் பதிவு செய்தேன். 

அதனை புரிந்துகொண்ட எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் திரு.தனுஷ் அவர்கள் எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்து தரவேண்டும் (முன்பணம் பெற்ற அடிப்படையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தரவேண்டும்) என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே தாங்கள் குறுக்கிட்டு DAWN Pictures திரு.ஆகாஷ் பாஸ்கரன் இட்லி கடை படப்பிடிப்பு நடக்கவேண்டும், “மேலிடத்து உத்தரவு” என்று கூறியதை மறந்தீரோ? 

five star creations report against dhanush viral on internet

மேலும் அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கித்தருவதாக தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுதியளித்தீர்கள். நாங்கள் புதிதாக படம் தயாரிக்கவில்லை, ஏற்கனவே திரு.தனுஷ் அவர்கள் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் என்று தங்களுக்கு நினைவுகூருகிறேன். நீதி வழங்கத்தானே சங்கங்கள் உள்ளன??? 

தங்களின் அரசியல் குறுக்கீட்டால் இன்றுவரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. வட்டிக்கு பணம் வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் வலியை எப்போது உணர்வீர்கள்… தயாரிப்பாளர்களின் நலன் காக்க எங்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளில் அரசியல் கலக்காமல் ஒத்துழைப்பு தருமாறு வேண்டிக்கொள்கிறேன். அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுத்தோம் என்று வெளியே நின்றிருக்கும் பத்திரிக்கையாளர்களிடம் கூற வேண்டாம். அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என்று என்னிடம் கூறிவிட்டு இன்று திரு.கதிரேசன் பிரச்சனை செய்கிறார் என்று சொல்வது தங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காட்டுகிறது… தயாரிப்பாளரின் நியாயம் அறியாமல் எப்படி உங்களால் இப்படி பொதுத்தளத்தில் மனசாட்சியின்றி பேச முடிகிறது. 

மதிப்பிற்குரிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் கவனத்திற்கு, அன்று எங்கள் நிறுவனம் வைத்த கோரிக்கை தங்களிடமே… நடிகர்களிடம் வட்டி பெறும் நோக்கத்தில் எந்த தயாரிப்பாளரும் முன்பணம் தருவதில்லை. தாங்கள் எடுக்கும் முடிவு அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் கருதியே. எங்களது வலியை உணர்ந்து விரைவில் நியாயம் பெற்று தருமாறு வேண்டிக்கொள்கிறேன். நன்றி, பங்குதாரர் கலைச்செல்வி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்” என்று கூறியுள்ளது. 

இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில் யார் அந்த மேலிடம்? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Leave a Reply

    Close menu