சைந்தவி ரொம்ப நல்ல பொண்ணு… ஜிவி பிரகாஷ் விவகாரத்து குறித்து உண்மை ஒப்புக்கொண்ட அம்மா!

Author:
21 September 2024, 3:33 pm

சமீப காலமாக நட்சத்திர பிரபலங்களின் விவாகரத்து விவகாரம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசை அமைப்பாளராக இருந்து வந்த ஜிவி பிரகாஷ் சைந்தவி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களது விவாகரத்து விவகாரம் பெறும் அதிர்வலையே ஏற்படுத்தியது. இதேபோல் முன்னதாக நடிகை சமந்தா – நாக சைதன்யா மற்றும் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடியை தொடர்ந்து அடுத்த அடுத்த விவாகரத்து செய்தி வந்ததை அடுத்து ஜி வி பிரகாஷ் சைந்தவியின் விவாகரத்து ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

gv prakash

இப்போது ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் வரை தொடர்ந்து இந்த விவாகரத்து விஷயத்தால் ரசிகர்கள் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஜெயம் ரவியின் விவாகத்து விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்ட வரும் சமயத்தில் ஜிவி பிரகாஷ் சைந்தவியின் விவாகரத்து குறித்து ஜிவி பிரகாஷ் குமாரின் அம்மாவான ஏ ஆர் ரைஹானா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர் சைந்தவி மீண்டும் என்னுடைய வீட்டுக்கு வரணும். அப்படின்னுதான் நான் ரொம்ப நாளா வேண்டிக்கிட்டு இருக்கேன். என்னோட மகள் போல் சைந்தவியை பார்த்துக் கொண்டேன். அவள் சிறந்த பெண். இது பற்றி என்னுடைய மகனிடம் கேட்டபோது அவன் விவாகரத்துக்கான காரணத்தை சொல்லும் அந்த காரணங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.

gv prakash

வேலிடிட்டியே இல்லை… அதுக்காக அவனை நான் கட்டாயப்படுத்த முடியாது. கடவுளிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று என கூறினார். மேலும் பேசி இருக்கும் அவர் இது அவர்களின் இருவரின் முடிவு வேறு யாரும் அவர்கள் அந்த விஷயத்திற்குள் நுழைய முடியாது.

இதையும் படியுங்கள்: பெரிய பங்களா வீடு கட்டி அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய நடிகை மிருணாளினி ரவி!

அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னால் ஒன்றும் பண்ண முடியாது. தனிப்பட்ட முறையில் ஜிவி பிரகாஷ் விவாகரத்து பற்றி கேட்டீர்கள் என்றால் சைந்தவி ரொம்ப நல்ல பொண்ணு. அது ஒரு பெரிய இழப்பு. தவிர்க்க முடியாத சூழ்நிலை… அதை விவரிக்க முடியாது.

சைந்தவி நம் வீட்டிற்கு வந்தால் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு. அவளை விட்டுக் கொடுக்க முடியாது. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழணும் என்பது தான் என்னோட ஆசை என ஜீவி பிரகாஷின் தாயாரான ரெஹானா கூறி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 298

    0

    0