‘நக்சல்களுடன் வெற்றிமாறனுக்கு தொடர்பு’.. இந்து மகா சபா பரபரப்பு புகார்!
Author: Hariharasudhan24 December 2024, 11:56 am
நக்சல்கள் உடன் இயக்குநர் வெற்றிமாறனுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இந்து மகா சபா தலைவர் ரமேஷ் பாபு கூறியுள்ளார்.
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், சேத்தன் உள்ளிடோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விடுதலை 2’. கடந்த டிசம்பர் 20ஆம் தேதி இளையராஜா இசையமைப்பில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்து மகா சபா தலைவர் ரமேஷ் பாபு கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நக்சல்கள் உடன் வெற்றிமாறனுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. நக்சல்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து ஏன் இந்தப் படத்தை அவர் எடுக்க வேண்டும்?
விடுதலை 1 படத்தில் வாத்தியார் என்பவர் வருவார், போவார். அதன் கதை வேறு. ஆனால், விடுதலை 2 படத்தில் முழுக்க முழுக்க நக்சல்கள் தொடர்பான காட்சிகளே வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, வெற்றிமாறன் உள்பட படத்தில் பணியாற்றியவர்களுக்கும், நக்சல்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் இந்து மகா சபாக்கு இருக்கிறது.
எனவே, நாங்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து, வெற்றிமாறனைக் கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் நக்சல் என்பதே கிடையாது. பின்னர், எப்படி தமிழகத்தில் நக்சல் இருப்பது போல் படத்தில் எடுத்து இருக்கிறார்கள்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: ’அல்லு அர்ஜுனுக்கும் என் மனைவி இறப்புக்கும் சம்பந்தமில்லை’.. கணவர் பரபரப்பு பேட்டி!
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வரும் விடுதலை 2 படத்தில், வலிமைமிக்க வசனங்கள் அதிக அளவில் உள்ளதாகவும், படம் முழுவதும் புரட்சிப் பயணம் மேற்கொள்வதாகவும், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் மற்றும் சேத்தன் ஆகியோரின் நடிப்பி பிரமிக்க வைப்பதாகவும் விமர்சனங்கள் வரப் பெறுகிறது.