அல்லு அர்ஜுனுக்கு சென்ற முக்கியச் செய்தி.. நிம்மதியில் ரசிகர்கள்!

Author: Hariharasudhan
3 January 2025, 6:44 pm

பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கி ஹைதராபாத், நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஹைதராபாத்: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2 – தி ரூல்’. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி, படம் வெளியாவதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது.

அப்போது, அங்கு அல்லு அர்ஜூன் திடீரென சென்றதால், அவரைப் பார்க்க ரசிகர்கள் வேகமாகச் சென்றனர். எனவே, அப்போது உண்டான இந்தக் கூட்ட நெரிசலில் ரேவதி (39) என்ற பெண் சிக்கி உயிரிழந்தார். அது மட்டுமல்லாமல், அவரது மகன் படுகாயம் அடைந்து மயக்கமான நிலையில் கீழே விழுந்தார்.

பின்பு, மருத்துவமனையில் அச்சிறுவன் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 14 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அந்தச் சிறுவன், கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மூளைச்சாவடைந்தார். அடுத்து கோமாவில் இருந்த நிலையில், நல்ல முன்னேற்றத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Allu Arjun Bail by Hyderabad court

இதனையடுத்து, அந்தப் பெண் இறந்ததை தொடர்ந்து, அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திரையரங்கிற்குச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு டிசம்பர் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் : மாப்பிள்ளை இவரா? ரசிகர்கள் ஷாக்!

அப்போது, அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்ட நிலையில், கைதான அன்றே அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டது. பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், அல்லு அர்ஜூனுக்கு பெண் ரசிகை உயிரிழந்த வழக்கு தொடர்பாக ஜாமீன் வழங்கி, ரூ.1 லட்சம் பிணைத் தொகை செலுத்த நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • Vikram to play villain in Marco sequel வெயிட்டான வில்லன் ரோலில் விக்ரம்…மலையாள சினிமாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல இயக்குனர்..!
  • Views: - 92

    0

    0

    Leave a Reply