மதுபோதையில் பிரபல நடிகைக்கு முத்தமிட்ட நபர் : இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan25 October 2022, 3:41 pm
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சர்தார். இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனம் பெற்று வருகிறது. மேலும், இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஒன்று ராஷி கண்ணா, மற்றொரு ஜோடி ரஜிஷா விஜயன். ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.
இந்த நிலையில் சர்தார் படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒப்பட்டது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் சர்தார் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அப்போது போஸ்டர் ஒட்டியிருந்த இடத்திற்கு வந்த போதை ஆசாமி ஒருவர், போஸ்டரில் இருந்த ராஷி கண்ணாவிற்கு நச்சு நச்சு என்று முத்தம் கொடுத்துள்ளார்.
இதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.