விவாகரத்து: “ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன்” – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Author:
9 September 2024, 1:25 pm

கடந்த சில நாட்களாகவே நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தியின் விவாகரத்து விவகாரம் பெறும் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வந்தது. இவர்களின் விவாகரத்து செய்திகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி பிரிய உள்ளதாக தகவல் வெளிவந்து கொண்டிருந்தது.

ஆனால், இருவருமே இதை உறுதி செய்யாமல் மௌனம் காத்து வந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

jeyam ravi

“வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.

எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

jeyam ravi divorce

என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே., நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இவர்களின் இந்த விவாகரத்து செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

  • இளையராஜானு ஒருத்தன் இருக்கான்.. மிஷ்கின் பேச்சால் வெடித்த சர்ச்சை!