தமிழ் சினிமாவின் ஹேண்ட்ஸம் ஹீரோவாக அறிமுகமான புதிதில் இருந்து தற்போது வரை வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம்ரவி. இவரது தந்தை எடிட்டர் மோகனாக இருந்து வந்தவர். இயக்குனராக அண்ணன் இருக்கிறார். இப்படி மிகப்பெரிய திரை பின்பலம் கொண்ட குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்த ஜெயம் ரவிக்கு வாய்ப்புகள் மிக சுலபமாக கிடைத்துவிட்டாலும் அதை மிக சரியாக தக்க வைத்துக்கொண்டார்.
இதனிடையே ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ததாக அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்தார். இந்த விவாகரத்து விவகாரம் பெரும் பூதாகரத்தை கிளப்பியது. மேலும் ஜெயம்ரவி பிரபல பாடகியான கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் தகாத உறவில் இருப்பதாகவும் அவருடன் கோவாவில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக ரகசியமாக வாழ்ந்து வருவதாக அவரது மனைவி ஆதாரத்துடன் வெளியீட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்து நாளுக்கு நாள் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஜெயம் ரவி ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். ஆர்த்தி மீது எனக்கு ஏன் வெறுப்பு ஏற்பட்டது? ஏன் நான் விவாகரத்து வரை சென்றேன்? என்பது குறித்து நிருபர்களிடம் சந்தித்து பேசி இருக்கிறார் .
அதாவது கடந்த சில வருடங்களாக ஆர்த்தி என்னை ஒரு கணவராக மதிக்கவே இல்லை. அவர் வீட்டில் இருக்கும் வேலைக்காரர்களுக்கு இருக்கும் மரியாதை கூட எனக்கு இல்லை என நடிகர் ஜெயம் ரவி மிகுந்த வருத்தத்துடன் கூறியிருக்கிறார். என்னுடைய மகன் பிறந்தநாள் அன்று ஐடிசி ஓட்டலில் என்னுடைய மகனின் பிறந்த நாளை செலிப்ரேட் பண்ண வேண்டும் என காத்துக் கொண்டிருந்தபோது மகனை அழைத்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கடைசிவரை ஆர்த்தி வரவே இல்லை .
ஆர்த்தி என் குழந்தைகளை கூட்டிக் கொண்டு இலங்கைக்கு சென்று விட்டது அதன் பிறகு தான் எனக்கு தெரிய வந்தது. எனக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை எனக்கு என்று தனியாக வங்கியில் கணக்கு கிடையாது. நான் எந்த செலவு செய்தாலும் அதற்கு கணக்கு கேட்பார் ஆர்த்தி.
ஆர்த்தியுடன் ஜாயிண்ட் அக்கவுண்டில் இருப்பதால் நான் எங்கு என்னுடைய கார்டை ஸ்கொய்ப் பண்ணாலும் அது ஆர்த்திக்கு தெரிந்துவிடும் உடனடியாக போன் அடித்து ஏன் இப்படி செலவு பண்ற என இந்த கேள்வி எழுப்புவார். நான் சம்பாதித்த பணத்தை கூட என்னை செலவு செய்யவே விடமாட்டார். ஆனால், அவர் இஷ்டம் போல செலவு செய்வார்.
எனக்கும் அவருக்கும் ஜாயிண்ட் அக்கவுண்ட் தான் இருக்கும். எனவே கார்ட்ஸ் ட்ரை பண்ணினால் அவருக்கு தான் மெசேஜ் போகும் வெளிநாட்டுக்கு போனால் அங்க போய் என்ன செலவு செய்த என்று என்னிடம் கேட்டால் கூட பரவாயில்ல. என்கிட்ட கேக்க மாட்டாங்க என்னுடைய அசிஸ்டன்ட்டிற்கு கால் பண்ணி கேப்பார் .
அது எனக்கு மிகுந்த அவமானமாக இருக்கும். ஒரு படத்தில் நடிக்கிறேன் என்றால் அந்த படத்தில் என்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு அந்த படத்தின் வெற்றிக்காக நான் ட்ரீட் கொடுப்பது ஒரு சாதாரணமான விஷயம். அதைக் கூட ஏன் செய்கிறாய் யாரெல்லாம் கூட இருக்காங்க என்று அசிஸ்டன்ட் இடம் போன் பண்ணி கேட்பார் .
அது எனக்கு பெரும் அவமானமாக தான் இருந்தது. அது மட்டும் இல்லாமல் கடந்த ஆறு வருடமாக என்னிடம் whatsapp கூட கிடையாது. அவர் சந்தேகப்பட்டு கிட்டே இருப்பதால் நான் whatsapp உபயோகிப்பதில்லை மேலும் இன்ஸ்டா அக்கவுண்டும் கிடையாது. என்னுடைய இன்ஸ்டா அக்கவுண்ட் அவருடைய பிடியில் தான் இருந்தது .
எனக்கு பாஸ்வேர்ட் கூட தெரியாது. நான் படத்தின் ப்ரோமோஷன்களின் போது பாஸ்வேர்டு வேண்டும் என கேட்டபோது கூட அவர் தரவே இல்லை. அதை அடுத்து நான் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு தான் என்னுடைய பாஸ்வேர்டை மீட்டெடுத்தேன் எனக் கூறியிருந்தார்.
மேலும் படிக்க: அட்ராசக்க… இது சூப்பர் அப்டேட்டா இருக்கே!! தளபதி 69 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?
எனக்கு அந்த வீட்டில் எந்த ஒரு மரியாதையும் இல்லாமல் போனதால் நான் இந்த ஒரு முடிவு எடுத்தேன். மேலும் மாமியார் என்னை வைத்து மூன்று படமும் எடுத்தார் மூன்று படமும் லாபம் கொடுத்திருந்தாலும் என்கிட்ட நஷ்டம் அப்படின்னு சொல்லி என்னுடைய கேரியர் காலி பண்ணிட்டாங்க. இதுதான் எனக்கு உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் நான் விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன் என ஜெயம் ரவி அதிர்ச்சிக்குரிய விஷயத்தை கூறி இருக்கிறார். இதை அடுத்து பலரும் ஜெயம் ரவிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.