அந்த பாடகி தான் என் உயிரை காப்பாற்றினார்…. தப்பா பேசாதீங்க – கொந்தளித்த ஜெயம் ரவி!

Author:
21 September 2024, 4:26 pm

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து மனைவி ஆர்த்தி இந்த விஷயம் எனக்கு தெரியவே தெரியாது எங்களுடைய ஆலோசனை கேட்காமலேயே அவரின் தனிப்பட்ட முடிவாக விவாகரத்தை அறிவித்துவிட்டார்.

இது குடும்ப நலன் சார்ந்து எடுக்கப்பட்டதில்லை. முழுக்க முழுக்க அவருடைய முடிவு. இது எனக்கு தெரியவே தெரியாது. எனக்கூறி அதிர்ச்சியை கிளப்பி இருந்தார் இதை அடுத்து ஜெயம் ரவி பிரபல பெண் பாடகியான கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

jeyam ravi

இப்படி அடுக்கடுக்கான விஷயங்கள் இந்த விவாகரத்தை குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் சமயத்தில் நடிகர் ஜெயம்ரவி இது குறித்து நிரூபர்களை சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார். அவர் பேசியதாவது, நான் எடுத்த இந்த விவாகரத்து முடிவு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் வேறு வழி இல்லை.

இது என்னுடைய முடிவு இது என் வாழ்க்கையின் ஒரு வேகத்தடை மாதிரி தான். ஒன்றரை மாதங்களுக்கு முன்பே நான் கோர்ட்டுக்கு போய் விட்டேன். அப்போதே விவாகரத்து செய்யப் போகிறேன் என்று கிசுகிசுக்கள் வெளிவந்துவிட்டது. நான் எடுத்த விவாகரத்து முடிவு என்னுடைய முன்னாள் மனைவிக்கு தெரியாது என்று கூறுவது தவறாக தோன்றுகிறது .

ஏற்கனவே நான் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அதை அவர்கள் பெற்றுக் கொண்டதாகவும் எனக்கு தகவலும் கிடைத்தது. அவர்கள் தரப்பிலும் பேசினார்கள். எங்கள் வீட்டில் வைத்தும் பஞ்சாயத்து நடந்தது. இவ்வளவு நடந்த பிறகும் எனக்கு இது தெரியவே தெரியாது என கூறுவது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. தெரியாமல் எப்படி முடியும்? எனக்கு புரியவில்லை. நான் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருந்தேன் என அவர்கள் கூறுவது சரியில்லை.

jeyam-ravi-

என் மகன்களுடன் தான் நான் இருந்தேன். மகன்களுக்காக அமைதியாக இருக்கேன். சட்ட ரீதியாக எதையும் நான் எதிர்கொள்வேன். மேலும் பேசிய ஜெயம் ரவி… பெண் பாடகியுடன் என்னை இணைத்து பேசுவது தவறு. அந்த பொண்ணுக்கு அம்மா அப்பா இல்லை அவருடன் இணைத்து பேசினால் அது பேசியவர்களுக்கு தான் அசிங்கம் அந்தப் பெண் லைசன்ஸ் பெற்ற சைக்காலஜிஸ்ட் நிறைய பேருக்கு உதவிகள் செய்திருக்கார். மன அழுத்தத்திலிருந்து எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார்.

அவரோடு என்னோடு இணைத்து பேசுவது மிகப்பெரிய தவறு. நான் அவரோடு ஒரு ஆன்மீக மையம் ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதை தவிர்ப்பதற்காக இப்படி பேசப்படுகிறதா என்று எனக்கு புரியவில்லை. ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி பேசினார்கள். அவருக்கு நிச்சயமாகி போய்விட்டார். அடுத்தது என்னை மார்பிங் செய்து போட்டோ வெளியிடுவார்கள் என்று தெரியவில்லை .

அம்மா அப்பா என் முடிவின்படியே போகிறார்கள். நான் சுற்றுகிற நபரும் இல்லை. என் பிரச்சினையில் ஒரு நாள் உண்மை என்ன என்பது தெரியவரும் அது கோர்ட்டில் தான் தெரியவரும். நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும் மகன்களுடன் சேர்ந்துதான் இருக்கிறேன்.

jeyam-ravi

இதையும் படியுங்கள்: ஒரே ஒரு படம் தான்… மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆன அட்லீ… மொத்த சொத்து எத்தனை கோடி தெரியுமா?

நோட்டீஸ் அனுப்பும் முன் மூத்த மகனிடம் விசயத்தை சொன்னேன். காலை உடைத்து கையை உடைத்து எல்லாமே நான் சம்பாதித்தது மக்கள் கொடுத்தது தான். என் இமேஜ் அவ்வளவு சீக்கிரமாக உடைத்து விட முடியாது.

ஒருநாள் உண்மை என்ன என்பது தெரிய வரும்போது சாணியை திருப்பி அடிப்பார்கள் என்று ஜெயம் ரவி ஓப்பன் ஆக பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு மனைவிக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பதாக தெரிகிறது. இதனால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது யார் மீது தான் தவறு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 344

    0

    0