ஒரு மாசம் ஒண்ணா இருந்தாங்க… கெமிஸ்ட்ரியை மீறிய ஜெயம் ரவி – பிரியங்கா – போட்டுடைத்த பிரபலம்!

Author:
29 October 2024, 5:37 pm

தீபாவளி தினத்தின் ஸ்பெஷலாக சிவகார்த்திகேயனின் அமரன், கவினின் ப்ளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் உள்ளிட்ட படம் ரிலீஸ் ஆக தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் அமரன் மற்றும் பிளடி பெக்கர் திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

brother movie

ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் கொஞ்சம் பின்தங்கி விட்டதால் இந்த திரைப்படம் மக்களின் பார்வையில் மிகக்குறைவான கவனத்தை ஏற்படுத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி பிரியங்கா அருள் மோகன் மற்றும் பூமிகா, நடராஜ் , சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் .

தீபாவளி தினத்தை ஒட்டி அக்டோபர் 31 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கியிருக்கிறார் . காமெடி கலாட்டா மற்றும் குடும்ப செண்டிமெண்ட் காதல் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விடிவி கணேஷ் காமெடியாக பேசினார்.

VTV Ganesh

அப்போது பிரியங்கா மோகன் தான் மிகவும் லக்கி என்ற பெயரை வாங்கி இருக்கிறார். அவரை ஒரு படத்தில் சேர்த்தால் அந்த படம் ஹிட் என்ற பெயரை பிரியங்கா மோகன் பெற்று இருக்கிறார். படத்தில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகனுக்கு இடையில் கெமிஸ்ட்ரியை தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது என கூறி அதிர வைத்தார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ஒரு மாத காலம் இருவரும் இணைந்து இருந்தனர் என சுட்டிக்காட்டினார்.மேலும் இந்த படத்தில் பணியாற்றிய எல்லாருமே ஒரு குடும்பம் மாதிரி பழகினோம் என விடிவி கணேஷ் தெரிவிக்க ஜெயம் ரவி டிடிவி கணேஷ் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 131

    0

    0