சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் அதிர்ச்சி மரணம் – சோகத்தில் மூழ்கிய கோலிவுட்!

Author:
9 September 2024, 10:56 am

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான டெல்லி பாபு இன்று அதிர்ச்சி மரணம் அடைந்திருக்கிறார். அவரது இந்த திடீர் மரணத்தலால் ஒட்டுமொத்த கோலிவுட்டே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான உறுமீன் என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக டெல்லி பாபு அறிமுகமாகினார்.

இதனை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சென்னையில் அவர் காலமாகி இருக்கிறார். இந்த அதிர்ச்சி மரணத்தை கேட்டு ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் மறைந்த திரைப்பட தயாரிப்பாளரின் குடும்பத்திற்கு பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகிறார்கள்.

dilli babu

தொடர்ந்து அவரது தயாரிப்பில் மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரிப்பது அதன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருந்து வந்த தயாரிப்பாளர் டெல்லி பாபு கடந்த சில நாட்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது .

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!