மாளவிகாவின் டயட் சீக்ரெட்ஸ்… ஸ்லிம் ஃபிட் Look’ல் சிக்குனு இருக்க இத ஃபாலோ பண்ணுங்க!

Author:
11 September 2024, 1:12 pm

இந்திய சினிமாவின் பிரபல இளம் நடிகையான மாளவிகா மோகனன். மும்பையில் பிறந்து வளர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கிய மாளவிகா மோகன் பின்னர் திரைப்பட நடிகையாக அறிமுகமாகினார்.

Malavika Mohanan - updatenews360

தற்போது முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது . இவரது தந்தை பிரபல பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் மூலமாக வாய்ப்புகள் மிக சுலபமாக கிடைத்துவிட்டாலும் மாளவிகா மோகன் அதை தனது திறமையால் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதை அடுத்து விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Malavika Mohanan - updatenews360

தற்போது கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்து திரையரங்கங்களை வெற்றிடை போட்டுக் கொண்டிருக்கும் தங்கலான் திரைப்படத்தில் மாளவிகா மோகன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். அடுத்ததாக பாலிவுட்டில் “யுத்ரா” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் உடல் ஆரோக்கியத்திற்காகவும் ஸ்லிம் பிட் தோற்றத்திற்காகவும் அவர் மெயின்டைன் செய்யும் டயட் மற்றும் உடற்பயிற்சிகள் குறித்த சீக்ரட்டான விஷயங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது, மாளவிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கு முன் சின்ன சின்ன பயிற்சிகளை மேற்கொள்கிறாராம். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் லேசாகவும் நல்ல ஆரோக்கியமான ஆற்றலையும் கொண்டிருக்குமாம்.

Malavika Mohanan - updatenews360

இதன் மூலம் உடல் தசைகளை தயார் செய்யவும் உதவுகிறது. மேலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக காய்கறி, பழங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்கிறாராம்.

இதனுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது வயிறு தட்டையாகும் கட்டுக்கோப்பாக இருக்க அதிகமாக planks எடுத்துக் கொள்வாராம். இத்துடன் யோகா செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் மாளவிகா மோகனன் படப்பிடிப்பு இடையில் அடிக்கடி காபி குடிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்.

இதன் மூலம் உடல் ஆற்றல் பெற்று உடல் எடை பராமரிக்க உதவுகிறது என கூறப்படுகிறது. இவை அனைத்தும் மாளவிகா தன்னுடைய மருத்துவரின் ஆலோசனைப்படி. பின்பற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!