இந்திய சினிமாவின் பொக்கிஷ படையப்பாளியான இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை என பல துறைகளில் தடம் பதித்திருக்கிறார். மாஸ்தான இயக்குனர்கள் ஆன கே பாலச்சந்தர், பாலு மகேந்திரா வரிசையில் மணிரத்தினமும் மிகச் சிறந்த இயக்குனராக இருந்து வருகிறார்.
காதல், தீவிரவாதம், நாட்டின் நிலவரம், நடுத்தரவாக மக்களின் நிலைப்பாடு, ராமாயணம், பொன்னியின் செல்வன் போன்ற பழம்பெரும் புராண கதைகளையும் வைத்தே படம் இயக்கி பிரபலமான இயக்குனராக இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் மௌன ராகம், கீதாஞ்சலி , அஞ்சலி, தளபதி, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், இப்படி பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி இருக்கும் மணிரத்தினம் கிட்டத்தட்ட 32 வருடங்களாக இசைஞானி இளையராஜாவுடன் சேர்ந்து பணியாற்றாமல் இருந்து வருகிறார்.
அப்படி என்ன இவர்களுக்குள் இத்தனை வருட பகை? மனக்கசப்பு? என சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் கேட்கப்பட்டதற்கு மணிரத்னம் கூறியதாவது, இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் இருவருமே இசையில் மிகப்பெரிய ஜீனியஸ். சினிமாவில் இவர்களைப் போல் நேர்த்தியான கலைஞர்களை எளிதில் பார்க்கவே முடியாது.
இதையும் படியுங்கள்: ஐஸ்வர்யாவுடன் மீண்டும் வாழ விரும்பும் தனுஷ் – நடந்த சம்பவத்தை சொன்னால் ஷாக் ஆகிடுவீங்க!
இவர்கள் இருவருமே எனக்கு ரொம்பவும் பிடித்தமான இசையமைப்பாளர்கள் தான். ஆனால் ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கு என்னுடைய திரைப்படங்கள் மாறியது. எனக்கும் அவருக்கும் என்னுடைய வேலைக்கும் அவருக்கும் ஒத்துப் போய்விட்டது.
இதனால் தான் நான் தொடர்ந்து ஏ ஆர். ரகுமானுடன் பணியாற்றி வருகிறேன். மேற்படி நான் இளையராஜாவை வேண்டும் என்று எந்த ஒரு திரைப்படத்திலும் நிராகரித்தது கிடையாது.
இளையராஜாவுக்கு இணை இளையராஜாவே என கடைசியாக இளையராஜாவை குறித்து பெருமையாக பேசி தங்களுக்குள் பகை ஒன்றுமில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தார் மணிரத்னம்.