தட்டித் தூக்கும் மாரி செல்வராஜ்.. அடுத்தும் தரமான சம்பவம் தான்!

Author: Hariharasudhan
27 November 2024, 1:31 pm

மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: தமிழ் சினிமாவின் தற்போதைய அதிகாரத்தில் முன்னணி மற்றும் முக்கியமான இயக்குனராக மாரி செல்வராஜ் அறியப்படுகிறார். பரியேறும் பெருமாள் முதல் வாழை வரை சமுதாயக் கருத்துகள், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை திரையில் தத்ரூபமாக காட்சிப்படுத்துவதில் கெட்டிக்காரர் என்றும் சொல்லப்படுகிறார்.

இந்த நிலையில், இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, மாஸ்ட்ரோ படத்திற்குப் பிறகு தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி பெயர் அடிபடுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரணம், விஜய் சேதுபதியின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மகாராஜா’ படத்தின் மாபெரும் வெற்றி தான். நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக ரிலீசான இதில் அனுராக் காஷ்யப், நட்டி, அபிராமி, திவ்ய பாரதி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வணிக ரீதியிலான வெற்றியையும் பெற்றது.

Vijay Sethupathi will be act with Mari Selvaraj

அது மட்டுமல்லாமல், அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2 படமும் வெளியாக இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் சூரி, மஞ்சு வாரியர், சேத்தன் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: “லப்பர் பந்து”படத்தால் இயக்குனருக்கு நடந்த ஏமாற்றம்..கூட இருந்தே குழி பறித்த தயாரிப்பாளர்..!

அதேநேரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான வாழை திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியது. மேலும், தற்போது துருவ் விக்ரம் உடன் பைசன் என்ற படத்தையும் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 257

    0

    0