ஏ.ஆர்.ரஹ்மான் எனது தந்தையைப் போன்றவர் என இசைக் கலைஞர் மோகினி டே கூறியுள்ளார்.
சென்னை: இந்தியத் திரையுலகின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் – மனைவி சாய்ரா பானு இடையேயான 29 ஆண்டுகால திருமண உறவில் இருந்து விலகுவதாக சமீபத்தில் இருவரும் அறிவித்தனர். இது திரை உலகில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கு அடுத்த சில மணிநேரத்தில் மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது.
இதன்படி, ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றிய பெண் இசைக் கலைஞர் மோகனி டேவும் (Mohini Dey) அவரது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். எனவே, இதனை தொடர்புபடுத்தி, சமூக வலைத்தளங்களில் பல்வேறு அனுமானங்கள் பரவின.
இவ்வாறு தனக்கு எதிரான தவறான செய்திகளை, அவதூறுகளை உடனடியாக சமூக வலைத்தளக் கணக்குகள், யூடியூப்கள், செய்திக் கட்டுரைகள் ஆகியவற்றில் இருந்து நீக்குமாறு ஏ.ஆர்.ரஹ்மான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து, உலகிலேயே சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும், அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் பிரிந்து சென்ற சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டு கூறினார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து மோகினி டே வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “என் தந்தை போன்ற நபருடன் என்னை தொடர்புப்படுத்தி பேசுவது வருத்தம் அளிக்கிறது. எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். என்னுடைய வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு பெண்கள் பள்ளி அருகில் பாலியல் தொழில்.. கரூரில் வழக்கறிஞர் வீடியோ உடன் புகார்!
ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர். அவர் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. அவரது மகளுக்கு எனது வயதுதான் இருக்கும் என நினைக்கிறேன். என் மீதும் ஏ.ஆர்.ரஹ்மான் அன்பும், மரியாதையும் வைத்துள்ளார். அவரது இசைக் குழுவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இருந்து வருகிறேன்.
என்னையும், அவரையும் இணைத்து வதந்திகள் வந்துள்ளன. ஆனால், அதில் உண்மை கிடையாது. இந்த வதந்திகள் என்னை காயப்படுத்துகின்றன. எனவே, பொறுப்புடன் கனிவாக நடந்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்து உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
This website uses cookies.