இரு மாநிலங்களை குறிவைக்கும் நெல்சன்.. ஜாக்பாட் காம்போ!

Author: Hariharasudhan
10 November 2024, 7:44 pm

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக திரை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் இறுதியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த், விநாயகம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசையில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. சூப்பர் ஸ்டாருக்கு உரித்தான பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியது. இதற்கு முன்னதாக விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்று இருந்தாலும், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனால் நெல்சன் சில நிகழ்ச்சிகளில் தனித்து விடப்பட்டதாக கவனிக்கப்பட்ட நிலையில், ஜெயிலர் திரைப்படம் மீண்டும் நெல்சனின் திரை வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது எனலாம். அந்த அளவிற்கு ஜெயிலர் திரைப்படம் மாஸ் வெற்றியைப் பெற்றது.

இந்த மாபெரும் வெற்றயைத் தொடர்ந்து, நெல்சன் அடுத்ததாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அதற்குப் பிறகு ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருப்பது உறுதி ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

Junior NTR

இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான், நெல்சன் அடுத்ததாக இயக்கும் படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இரண்டு மூன்று கதைகளை ஜூனியர் என்டிஆரிடம் நெல்சன் கூறியதாகவும், அதில் ஒன்றை ஜூனியர் என்டிஆர் கிளிக் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், நெல்சன் – ஜூனியர் என்டிஆர் இணையும் படத்தினைத் தயாரிக்க இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஷாரிக் LOVE சொல்லவே இல்ல… அதுக்கு முன்னாடியே அது நடந்துடுச்சு – மனம் திறந்த மரியா!

ஏற்கனவே, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜூனியர் என்டிஆர், நேரடி தமிழ் படம் நடிக்க விருப்பம் எனவும், இயக்குனர் வெற்றிமாறனை பிடிக்கும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அந்த கனவு நெல்சன் வழியாக நிறைவேறப் போகிறது. அதேநேரம், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடைசியாக தேவரா பகுதி 1 படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!