சினி அப்டேட்ஸ்

மாட்டிக்கினாரு ஒருத்தரு… தானமளித்து வீடியோ போட்ட இர்ஃபானை பந்தாடும் இணையவாசிகள்…

யூட்யூப் பிரபலம்

Food Vlogger இர்ஃபானை தெரியாத நபர்களே இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இணையவாசிகளின் மத்தியில் மிகப் பிரபலமான யூட்யூபராக வலம் வருபவர் இர்ஃபான். உலகம் முழுவதும் உள்ள பல பிரபலமான உணவுகளையும் உணவகங்களையும் தமிழ் இணையவாசிகளுக்கு அறிமுகப்படுத்தி வரும் இர்ஃபான் 47 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்ட முன்னணி யூட்யூபராகவும் திகழ்ந்து வருகிறார்.

Food Vlogger ஆக மட்டுமல்லாது அவ்வப்போது பல பிரபலங்களையும் பேட்டிக்கண்டு வருகிறார். சமீபத்தில் கூட இர்ஃபான் மோகன்லாலை பேட்டிகண்ட வீடியோ இணையத்தில் படுபயங்கரமாக வைரல் ஆனது. 

இது மட்டுமல்லாது தனது மனைவி, குழந்தையுடன் அவரது வாழ்வில் அன்றாடம் நடக்கக்கூடிய பலவற்றையும் அவர் வீடியோவாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நேற்று ரம்ஜானை ஒட்டி சாலைகளில் ஆங்காங்கே தென்படும் எளிய மக்களுக்கு பணம், ஆடை போன்றவற்றை வழங்கி வீடியோ எடுத்து அதனை வெளியிட்டதில்தான் இப்போது இணையவாசிகளிடம் சிக்கியுள்ளார் இர்ஃபான்.

மரியாதையே இல்லாம நடந்துக்குறார்…

இர்ஃபான் தனது மனைவி மற்றும் உறவினருடன் காரில் பல பகுதிகளுக்குச் சென்று சாலையில் ஆங்காங்கே தென்படும் எளிய மக்களுக்கு பணம், ஆடை போன்றவற்றை வழங்கினார். அவர்கள் காரை விட்டு கிழே இறங்காமல் பணம், ஆடை போன்றவற்றை வழங்கிய செயலை மரியாதை இல்லாத செயல் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். 

அது மட்டுமல்லாது இர்ஃபான் ரம்ஜான் பரிசுகளை வழங்கும்போது அந்த பரிசை வாங்கவந்த சிலர் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். எப்படியாவது பணத்தையும் ஆடையையும் வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கில் ஒருவர் இர்ஃபான் மனைவி ஆலியாவின் கையில் இருந்த பரிசு பொருளை பிடித்து இழுத்தார். இதனால் இர்ஃபானுக்கு கோபம் வர அந்த நபரை சற்று கடுமையாக திட்டிவிட்டார். 

இந்த வீடியோவை பார்த்த பலரும், “அவர்கள் ஏழைகள். நாளை அவர்களுக்கு உணவு கிடைக்குமா, பணம் கிடைக்குமா என்பதில் உறுதி இல்லை. ஆதலால்தான் அவர்கள் எப்படியாவது உங்கள் பரிசு பொருட்களை வாங்கிவிட வேண்டும் என்று அப்படி நடந்துகொண்டார்கள். அவர்களின் நிலை புரிந்துகொள்ளமால் அவர்கள் அப்படி கடுமையாக பேசியது கண்டிக்கத்தக்கது என்று விமர்சித்து வருகின்றனர். 

நாம் உதவி செய்வதை ஊர் முழுக்க தண்டோரா அடித்து கூறக்கூடாது. அதுதான் அறம். தனது யூட்யூப் சேன்னலுக்கு பார்வையாளர்களை அதிகம் பெற்று காசு சம்பாதிக்கவே இர்ஃபான் இவ்வாறு செய்கிறார் எனவும் சிலர் இர்ஃபானை விமர்சித்து வருகின்றனர். 

விளக்கம் கொடுத்த இர்ஃபான்…

“நான் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக நினைப்பவர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், அந்த சம்பவம் என்னை அழுத்ததிற்குள்ளாக்கியது, ஆதலால் நான் பேசியது புண்படுத்தியது போல் தெரிந்துள்தாக நினைக்கிறேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆலியாவுக்கு அப்படி நேர்ந்ததால் நான் அவ்வாறு நடந்துகொள்ளும்படி நேர்ந்தது” என்று தனது நடத்தைக்கு விளக்கம் கொடுத்துள்ளார் இர்ஃபான்.

சர்ச்சையில் சிக்குவதே வழக்கம்!

சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை மக்களுக்கு அறிவிக்க Gender Reveal என்று ஒரு வீடியோவை வெளியிட்டு சட்டத்தை மீறி செயல்பட்டதாக சிக்கலில் சிக்கிக்கொண்டார். அதன் பின் அதற்கு மன்னிப்பும் கேட்டார் இர்ஃபான். அதே போல் சமீபத்தில் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததை வீடியோவாக எடுத்து சர்ச்சையில் சிக்கினார். இது போல் பல சர்ச்சையில் சிக்குவதையே வழக்கமாக கொண்டிருக்கும் இர்ஃபான், தற்போது நல்லது செய்யப்போயும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

Arun Prasad

Recent Posts

மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?

பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…

5 hours ago

பெண் ஆசிரியரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி.. அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…

6 hours ago

அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?

பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…

6 hours ago

திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…

6 hours ago

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

7 hours ago

ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!

புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

7 hours ago

This website uses cookies.