போஸ்டரே சும்மா அதிருது …. தயாரிப்பாளராக மாறிய சிம்ரன் – கவனம் ஈர்க்கும் First Look!

Author:
7 September 2024, 2:35 pm

90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சிம்ரன் முதன் முதலில் ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்தார்.

இவர் விஜய் ,அஜித், பிரசாந்த் ,சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இதனிடையே குறிப்பாக சிம்ரனின் நடனத்திற்கு என கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் . தற்போது வரை அவரது நடனத்தை மெய் மறந்து ரசிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

simran

இதனிடையே திருமணம் குழந்தை என குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன சிம்ரன் சில வருடம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார். அண்மையில் பிரசாந்துடன் சேர்ந்து அந்தகன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

பிரசாந்துக்கு ஜோடியாக படங்களில் நடித்து வந்த சிம்ரன் இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து சிம்ரன் துருவ நட்சத்திரம், வணங்காமுடி ,சப்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை சிம்ரன் தனது கணவருடன் இணைந்து திரைப்படங்களை தயாரிக்கும் பணியில் இறங்கி இருக்கிறார். தயாரிப்பாளராக அவர் அறிமுகம் ஆகும் முதல் திரைப்படமே இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகிறது .

simran

இந்த திரைப்படம் தி லாஸ்ட் ஒன் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தின் ஸ்பெஷல் ஆக இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் சிம்ரன் மிரட்டலான தோற்றத்தில் காணப்படுகிறார்.

எனவே இந்த திரைப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் நடிகைகள் குறித்த விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இந்த திரைப்படம் தமிழ். தெலுங்கு. ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 350

    0

    0