60s ரசிகர்களையே தட்டியெழுப்பிய பராசக்தி.. ஜூலைக்கு கெடு.. உதவுமா குடும்பம்?
Author: Hariharasudhan30 January 2025, 12:58 pm
பராசக்தி என்ற பெயரை சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி தரப்பு சொந்தம் கொண்டாடுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை: முன்னதாக, ‘சிவாஜி’ என்ற பெயரில் ரஜினிகாந்தின் படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டபோதே, சிவாஜி ரசிகர்கள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அடையாளமாக உள்ள முதல் படத்தின் தலைப்பை வைத்துள்ளதாகல், சிவாஜி பேரவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, சிவகார்த்திகேயனின் இப்படத்துக்குச் சிக்கல் எழலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ‘பராசக்தி எனப் பெயரிட்டுள்ள’ டீசரை நேற்று (ஜன.29) படக்குழுவினர் வெளியிட்டனர்.
அதேநேரம், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் நடிக்கும் அவரது 25வது படத்திற்கு, தமிழில் சக்தித் திருமகன் என்றும், தெலுங்கில் பராசக்தி என்றும் பெயரிட்ட போஸ்டரை வெளியிட்டனர். இதனால் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரே பெயர் வைத்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், இந்த இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் அறிக்கை வெளியிட்டுள்ளன. இதன்படி, இருதரப்பும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறையாக பெயரைப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, சிவகார்த்திகேயனின் பராசக்தி தெலுங்கிலும் அதே பெயரிலே வெளியாகிறது.
இதையும் படிங்க: ராக்கெட் வட்டி வசூலிக்கும் கந்து வட்டி கஜேந்திரன்.. மிரட்டி பல கோடி சொத்துகளை பறித்த திமுக நிர்வாகி!
தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இரண்டு படங்களையும் ‘பராசக்தி’ என்றே பதிவு செய்துள்ளனர். எப்படி தயாரிப்பாளர்கள் சங்கம் இதைக் கவனத்தில் கொள்ளாமல் ஒரே பெயரை வழங்கியது எனவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனை, சிவாஜியின் குடும்பம் முடித்துவைக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், ஏற்கனவே சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியிலும், இறுதிகட்டப் படப்பிடிப்பு சிதம்பரத்திலும் ஜூலையுடன் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.