பிரபல நடிகை வீட்டில் மர்ம மரணம்? கொலையா? தற்கொலையா?

Author: Hariharasudhan
2 December 2024, 1:27 pm

கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா (Shobitha Shivanna) மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஹைதராபாத்: கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தவர் ஷோபிதா சிவன்னா. இந்த நிலையில், இவர் நேற்று (டிச.1) தெலுங்கானா மாநிலம், காச்சிபெளலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொண்டாபூர் பகுதியில் உள்ள தனது அபார்ட்மெண்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். அதேநேரம், ஷோபிதாவின் சடலம் தற்கொலை செய்து கொண்டவாறு இருந்த நிலையிலேயே மீட்கப்பட்டு உள்ளது. மேலும், அவரது உடல் காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது

யார் இந்த ஷோபிதா சிவன்னா? 1992, செப்டம்பர் 23 அன்று கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் பிறந்த ஷோபிதா சிவன்னா (Shobitha Shivanna), தனது பள்ளிப் படிப்பை பல்த்வின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடித்து உள்ளார். தொடர்ந்து, NIFT-இல் பேஷன் டிசைனிங் முடித்த அவர், அந்தத் துறையிலேயே சிறிது காலம் பணிபுரிந்து உள்ளார்.

Kannada Actress Shibitha Shivanna found dead

பின்னர் 2015ஆம் ஆண்டு ராங்கிடரங்கா (RangiTaranga) என்ற கன்னட படத்தின் மூலம் திரையில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே தனது நடிப்பிற்காக பாரட்டப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், எரடாண்ட்லா மூரு (Eradondla Mooru) மற்றும் ATM; Attempt to Murder ஆகிய மெகாஹிட் படங்களின் மூலம் கவனம் பெற்றார்.

இதையும் படிங்க: பிரபல நடிகர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம்!

அது மட்டுமல்லாமல், காலிபடா (Gaalipata), மங்கள கெளரி (Mangala Gowri) மற்றும் பிரமகந்து (Brahmagantu) ஆகிய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து, குடும்பம் முழுவதும் நன்றாகத் தெரிந்த நடிகையாக உள்ளார். இந்த நிலையில், அவரது திடீர் இறப்பு கன்னட திரையுலகம் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!