இந்திய சினிமாவில் பிரபல நடிகையான பூஜா ஹெக்டே மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தார். இவர் மாடல் அழகியாக இருந்தபோது கடந்த 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
அதன்மூலம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. முதன் முதலில் தமிழ் சினமாவின் முத்தான இயக்குனர்களில் ஒருவரான மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.
அதுதான் பூஜாவின் முதல் திரைப்படம் கூட. ஆனால் அந்த திரைப்படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் கவனத்தை செலுத்தி நடித்து வந்தார்.
தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த பூஜாவுக்கு அங்கு நம்பர் ஒன் நடிகையாகும் வாய்ப்பு கூடிய சீக்கிரத்திலேயே கிடைத்து விட்டது. அதிக சம்பளமும் அங்கு வாங்கி வந்தார். இதனிடையே மீண்டும் தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் .
இந்த திரைப்படமும் பெரிதாக அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தும் படியாக அமையவில்லை. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் பூஜா ஹெக்டே ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு படு குண்டாக மாறிப் போய் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி எல்லோரையும் விழிப்புதுங்க வைத்துள்ளது.
முன்னதாக நடிகை நிவேதா தாமஸ். படு பருமனான தோற்றத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.