சினி அப்டேட்ஸ்

தளபதி 69 படத்தில் இணையும் மாஸ் வில்லன் நடிகர்… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

நடிகர் விஜய் தற்போது அரசியலில் மும்முறமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி தொடர்ந்து தனது அரசியல் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்னதாக நடிகர் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதை எடுத்து கடைசி திரைப்படமாக தளபதி 69 படம் உருவாகப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். எச் வினோத் இயக்கத்தில் கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கி வரும் இந்த திரைப்படம் தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும்.

இந்த திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் புதிய போஸ்டருடன் இணையத்தில் வெளியானது. தளபதி 69 என தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் போஸ்டரில் நடிகர் விஜய்யின் கையில் கொழுந்து விட்டு எரிகின்ற தீப்பந்தத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தார்.

மேலும், அந்த போஸ்டரில் “The torch bearer of Democracy arriving soon” என்கிற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தின் கதையை எச். வினோத் முழுக்க முழுக்க கமல்ஹாசனை வைத்து எடுப்பதற்காக தான் எழுதியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அது கிடப்பில் போடப்பட்டதால் இதை அடுத்து கமலுக்காக எழுதிய கதையை ஹெச் வினோத் தற்போது தளபதியை விஜய்யை வைத்து தளபதி 69 படமாக இயக்கி வருகிறார்.

கமல்ஹாசனிடம் கால் சீட் கிடைக்காததால் அடுத்ததாக இந்த படத்தை விஜய் சேதுபதி வைத்து இயக்குவதாக இருந்த எச்பி வினோத்துக்கு அந்த முயற்சியும் கைவிட்டு போனது. காரணம் விஜய் சேதுபதி பிஸியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு தனுஷிடம் இந்த கதையை கூறியிருக்கிறார் எச். வினோத்.

தனுஷிற்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தால் அப்போது தனுஷ் பல படங்களில் கமிட் ஆகி இருந்த காரணத்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறியிருக்கிறார். மேலும் இந்த படத்திற்காக காத்திருங்கள் நான் எல்லாத்தையும் முடித்து விட்டு வருகிறேன் என தனுஷ் கூறியதாகவும். கூறப்படுகிறது ஆனால், அஜித்தும் இது அரசியல் சம்பந்தப்பட்ட கதை இதில் நான் நடிக்க மாட்டேன் என கூறி நிராகரித்து விட்டாராம்.

இதையும் படியுங்கள்: இதனால் தான் கமல் உடன் நடிக்க மறுத்தேன் – ஓப்பனா கூறிய நடிகை ராதிகா!

அதன் பிறகு தான் தற்போது இந்த படத்தின் கதை தளபதி விஜய்க்கு சென்றிருக்கிறது. எனவே கமல்ஹாசன் விஜய் சேதுபதி தனுஷ் என பல நட்சத்திர பிரபலங்கள் மிஸ் பண்ணின தளபதி 69 படத்தில் தற்போது விஜய் நடித்த வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படத்தை குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. அதாவது இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கப் போடுவதாக தகவல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிய வரவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

Anitha

Recent Posts

மாமே சவுண்ட் ஏத்து..தெறிக்க விடும் அனிருத்..’குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய அப்டேட்.!

பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…

43 minutes ago

வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!

கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…

2 hours ago

உதயநிதிக்கு ஜால்ரா போடவா? கடுப்பான Ex அமைச்சர்.. மதுரையில் பரபரப்பு பேச்சு!

திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…

2 hours ago

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

2 hours ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

4 hours ago

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

5 hours ago

This website uses cookies.