பாப்பா பொறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா? பிரணிதா சுபாஷ் வெளியிட்ட கியூட்டான போட்டோ!

Author:
5 September 2024, 7:24 pm

மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை பிரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Pranitha Subhash

2010 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் முதன்முதலாக நடிகை பிரணிதா சுபாஷ் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த பிரணிதா சுபாஷ் முதன் முதலில் 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த உதயம் திரைப்படத்தின் மூலமா ஹீரோயினாக அறிமுகமானார் .

அதையடுத்து 2012 ஆம் ஆண்டு சகுனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவர் ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்திருந்தார்.

Baby Boy for Pranitha Subhash

தொடர்ந்து மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படத்தில் பிரணிதா சுபாஷ் நடித்தார். தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

நித்தின் ராஜ் என்ற தொழிலதிபரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரணிதாவுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த பிரணிதா சுபாஷிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருப்பதை மகிழ்ச்சியோடு புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 344

    0

    0