73 வயசிலும் என்ன எனர்ஜி….. மனசிலாயோ பாடலுக்கு ரிகர்சல் செய்த ரஜினி – வைரல் வீடியோ !

Author:
23 September 2024, 11:47 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் படத்தின் புகழ் இயக்குனர் T. J. ஞானவேல் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

vettaiyan manasilayo

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த திரைப்படத்திலிருந்து இடம்பெற்றிருந்த மனசிலாயோ பாடல் மாபெரும் வெற்றி பெற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்திருக்கிறது.

வேட்டையன் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் மனசிலாயோ பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ட்ரெண்டிங்கில் வலம் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்தப் பாடலில் ரஜினியுடன் சேர்ந்து மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை மஞ்சு வாரியர் நடனமாடி இருக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது சினிமா ரசிகர்கள் மொத்த பேரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த பாடலுக்கு பிரபல டான்ஸ் மாஸ்டர் ஆன தினேஷ் தான் கொரியோகிராப் செய்திருக்கிறார்.

எளிமையான வகையில் நடன அசைவுகளைக் கொண்டு மிகவும் எதார்த்தமாக சிம்பிளாக செம ஸ்டைலாக ரஜினிக்கு ஏற்றவாறு இந்த கொரியோகிராப் அமைத்திருக்கும் ஸ்டைல் ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களையும் கொண்டாட வைத்திருக்கிறது .

vettaiyan-manasilayo

இதையும் படியுங்கள்:Romance’ல முழுசா முழ்கிட்டாரேப்பா…. திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் ஷாரிக் – வீடியோ!

இந்த நிலையில் மனசிலாயோ பாடலுக்காக ரிகர்சல் எடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது கிட்டத்தட்ட 73 வயது ஆகியும் நடிகர் ரஜினிகாந்தின் எனர்ஜி புரியாமல் அதே ஸ்டைலோடு மாஸ் ஹீரோவாக இருப்பதை பார்த்து சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மெய் மறந்து இந்த வீடியோவை ரசித்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 376

    0

    0