வீட்டில் எல்லோரையும் பகைத்துக்கொள்ளும் FATMAN… அசிங்கப்படப்போவது உறுதி!

Author:
11 October 2024, 9:44 pm

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே போட்டியாளர்களிடையே கடும் மோதல் மற்றும் முதல் நாளே எவிக்ஷனில் சாக்சனா வெளியேறியது உள்ளிட்ட பல சம்பவங்களால் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பெரும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

bigg boss 8

பிக் பாஸ் துவங்கிய ஐந்தாவது நாளான இன்று வீட்டிற்குள் ரவிந்திருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று ஆண்கள் அணியினர் இணைந்து பிராங்க் ஒன்றை செய்தனர். இதனால் பெண்கள் அணியில் இருந்த அனைவரும் கடும் கோபத்தில் இருந்தார்கள் .

பெண்கள் அணியை ஏமாற்ற ஆண்கள் அணியினர் செய்த இந்த பிராங்க் தற்போது ஆண்கள் அணியிலேயே மோதலை சண்டையும் வாக்குவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆம், இந்த பிராங் செய்வதற்கான காரணம் ரஞ்சித் நாமினேஷன் செய்யப்பட்டு இருப்பதினால் தான் என ரவீந்தர் சொல்ல என் பெயரை பயன்படுத்தி ஏன் கேம் ஆடுறீங்க?

என்னுடைய பெயரை பயன்படுத்தாதீங்க என ரஞ்சித் Fatman’னிடம் கூற ரவீந்தர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அந்த சமயத்தில் தர்ஷா மற்றும் தர்ஷிகா இருவருமே இணைந்து ஆடியது தான் கேம் என ரவீந்தர் சொல்ல அதில் தர்ஷிகா இது பொய் என அவரை அதட்டி கூறுகிறார் .

அதே போல் இந்த விஷயத்தில் விஷாலுக்கும் ரவிந்திருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. இப்படியாக விளையாட்டில் ஆரம்பித்த ஒரு விஷயம் தற்போது பெரும் சண்டையுடன் மோதலில் முடிவடைந்து இருக்கிறது. இதை பார்த்தால் ரவீந்தர் தொடர்ந்து அடுத்தடுத்த பல போட்டியாளர்களுடன் சண்டையும் வாக்குவாதமாகவே எல்லோருடைய எல்லோரையும் பகைத்துக் கொள்கிறார்.

இதையும் படியுங்கள்:

இந்த விஷயத்தில் பலரும் ரவீந்திரனை திட்டி தீர்த்து வருவதோடு ரஞ்சித்துக்கு பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ரவீந்தர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மற்றவர்களின் உணர்ச்சிகளோடு விளையாடுவது மிகப்பெரிய தவறு என பலரும் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். இது இப்படியே போனால் ரவீந்தர் நிச்சயம் அசிங்கப்பட்டு தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!