கங்குவா இசை மீதான விமர்சனத்திற்கு இசையமைப்பாளர் மட்டுமே காரணம் அல்ல என்று ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி தெரிவித்து உள்ளார்.
சென்னை: ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் கங்குவா. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்து உள்ள இப்படத்தில் சூர்யா, திஷா பதானி மற்றும் பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். மேலும், கார்த்தி கேமியோ கதாபாத்திரத்தில் வந்து உள்ளார்.
இந்த நிலையில், கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று (நவ.14) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்து உள்பட 10 மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியானது. சூர்யாவின் 3 வருட இடைவெளி, கங்குவா புரோமோசன்ஸ் ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.
ஆனால், அதற்கு மாறாக, கங்குவா படம் முழுக்க முழுக்க எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது. காரணம், படத்தில் கதை இல்லை, திரைக்கதை சரியாக இல்லை, எந்நேரமும் கத்திக் கொண்டே இருக்கின்றனர், இசை இரைச்சலாக உள்ளது என்ற பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
இதில் முக்கியமாக, இசை இரைச்சலாக காது வலியை வரவைப்பதாக உள்ளதாகவும், காதை பதம் பார்த்து விட்டதாகவும் திரைவிமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், கங்குவா படத்தின் இசை மீதான விமர்சனத்திற்கு ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி கருத்து ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: இன்னைக்கு ஓடிடில இத்தனை படம் ரிலீஸா? கங்குவாவை பதம் பார்க்கும் லிஸ்ட்.!!
அதில், “திரையரங்கிற்கு வந்து பார்க்கும் ரசிகர்கள், தியேட்டரை விட்டுச் செல்லும் போது மகிழ்ச்சியுடன் செல்ல வேண்டும். தலைவலியோடுச் செல்லக் கூடாது. இதற்காக இசையமைப்பாளரை மட்டும் திட்டுவது சரியில்லை.
கடைசி நேரத்தில், அவர்கள் மீது போடப்படும் அழுத்தம் மற்றும் சாதாரண நடிகர்களை யுக புருஷர்களாக காண்பிப்பதற்கு சத்தம் மட்டுமே ஒரே வழி என நினைக்கும் கருத்து கொண்டவர்களின் செயல் தான் இதுபோன்று இசை மீது மோசமான விமர்சனம் வருவதற்கு காரணம்” எனத் தெரிவித்துள்ளார். தற்போது, இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.