சூப்பர் ஸ்டாரை கொலை செய்ய திட்டம்… 70 பேருடன் 24 மணி நேர கண்காணிப்பு !

Author:
18 October 2024, 8:47 am

இந்தி சினிமாவில் நட்சத்திர நடிகராகவும் ஸ்டார் அந்தஸ்திலிருந்து வருபவருமான நடிகர் சல்மான்கானை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகி ஒட்டுமொத்த சினிமா உலகையே அதிர வைத்திருக்கிறது.

அதாவது, சர்வதேச கிரிமினல் ஆன லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானை கொல்ல திட்டமிட்டு இருக்கிறார். இவரது 70 பேர் கொண்ட கும்பல் தான் சல்மான் கான் 24 மணிநேரம் கண்காணித்து வருவதாக மகாராஷ்டிரா காவல்துறை கூறியிருக்கிறது. முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2024 ஏப்ரலுக்குள் சல்மான் கானை கொள்ளப்போவதாக லாரன்ஸ் என்பவர் பகிரங்கமாக அறிவித்திருந்தார் .

salman khan

இந்த கால அவகாசம் முடிந்ததால் மகாராஷ்டிரா போலீசார் சற்று பெருமூச்சு விட்டிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் கடந்த அக்டோபர் 12ம் தேதி இரவு மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நடிகர் சல்மான்கானுக்கான பாதுகாப்பினை மகாராஷ்டிரா அரசு மீண்டும் தற்போது பலப்படுத்தி இருக்கிறது.

முன்னதாக நடிகர் சல்மான்கான் அரியவகை மானை வேட்டையாடிய புகாரில் சிக்கினார். அந்த விவகாரத்தில் கைதான சல்மான் கானுக்கு ஜாமின் கிடைத்தது. அவர் மீது வனவிலங்கு தடுப்பு ஆயுதங்கள் தடை சட்டம் உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2018 இல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரண விசாரிக்கப்பட்டது.

அதே நேரத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜரானார் லாரன்ஸ் . நான் சல்மான் கானை கொல்ல இருப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருவதால் சல்மான் கானுக்கு லாரன்ஸ் கும்பலால் பெரும் ஆபத்து இருப்பதாக அஞ்சப்படுகிறது .

இதனால் மும்பையில் வசித்து வரும் நடிகர் சல்மான் கான் தங்கியுள்ள பாந்த்ராவின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் காவல்துறை முகாம் போல் மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் ஒரு கண்காணிப்பு தீவிர படுத்தும் வகையில் நவீன சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. அவரது வீட்டு வளாகத்தின் வெளிப்பகுதியில் அமருவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 11 பாதுகாப்பு காவலர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் துப்பாக்கி பயிற்சி பெற்ற திறமையான இரண்டு கமாண்டோக்களும் இருக்கிறார்கள். மேலும் சல்மான் கான் எங்கு சென்றாலும் அவரை போலீஸ் பின்தொடர்ந்து செல்கிறது. இது தொடர்பாக மகாராஷ்டிர காவல் துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதையும் படியுங்கள்: அட கடவுளே இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? வருத்தத்தில் 90ஸ் கிட்ஸ்!

அதில் சல்மான் கானை கொள்வதற்காக துருக்கி நாட்டின் ஜிகானா கைதுப்பாக்கிகள் லாரன்ஸ். அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வகை துப்பாக்கியால் தான் பஞ்சாபின் பிரபலமான பாடகரான சித்து முஸேவாலாவையும் லாரன்ஸ் கும்பல் சுட்டுக்கொன்றனர். எனவே லாரன்ஸ் கும்பலிடம் இருந்து சல்மான் கானை காப்பாற்றுவது மிகப்பெரிய சவால் ஆகியிருக்கிறது. ஆம் 24 மணி நேரமும் 70 பேர் கொண்ட கும்பல் சல்மான் கானை கண்காணித்து வருவதாக மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்திருக்கிறது.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 321

    0

    0