தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக இருந்து வரும் சசிகுமார் மிகப்பெரிய இயக்குனர்களாக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். பாலா அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பின்னர் இயக்குனராக அறிமுகமானார்.
திரைப்படத்தை துறையில் இருந்த ஆர்வத்தால் தன்னுடைய 20 வயதில் மாமா கந்தசாமிடம் திரைப்படங்களில் பணியாற்றி வந்தார். சேது திரைப்படத்தை தயாரித்தவர் தான் அவரது மாமா கந்தசாமி. இந்த திரைப்படத்திற்காக உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார்.
அங்கு அவர் அமீரிடம் அறிமுகமாகி இருக்கிறார். மேலும் அவருக்காக ஒரு பெயரையும் உருவாக்கவும் உதவினார். மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி அதன் பிறகு சுப்பிரமணியபுரம் படத்திற்காக தனது அடித்தளத்தை தொடங்கினார் சசிகுமார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய நிறைவேறாத ஆசை குறித்து மிகுந்த ஏக்கத்துடன் பேசி இருக்கிறார் சசிகுமார். அதாவது நாங்கள் எங்கள் கிராமத்தில் சிவலிங்கம் எனும் தியேட்டர் வைத்திருந்தோம். அந்த தியேட்டர்ல என்னுடைய படத்தை போட்டு பார்க்கணும் அப்படிங்கறது என்னோட ரொம்ப நாள் ஆசையா இருந்துச்சு.
மேலும் படிக்க: விஜயகாந்தின் நிறைவேறாத ஆசை… நினைத்து நினைத்து அழும் பிரேமலதா!
ஆனால், அப்போ திடீர்னு பார்ட்னஸ் எல்லாருமே சேர்ந்து தியேட்டர் மூடனும் அப்படின்னு முடிவு பண்ணிட்டாங்க. கொஞ்ச நாள் இருங்க என்னோட படத்தை இந்த தியேட்டர்ல பார்த்து விடுறேன் அப்படின்னு நான் சொன்னேன். அவங்க கேட்கவே இல்லை.
அதனால நான் எடுத்த படம் தான் பார்க்க முடியவில்லை என்று நான் அசிஸ்டன்ட் டைரக்டராக ஒர்க் பண்ண ராம் படத்தை அந்த தியேட்டரில் முன் சீட்டில் அமர்ந்து பார்த்தேன் என சசிகுமார் பேசி இருந்தார். கடைசி வரை தான் நடித்த படத்தை அந்த தியேட்டரில் பார்க்கவே முடியவில்லை என மிகுந்த ஏக்கத்துடன் பேசியிருக்கிறார் சசிக்குமார்.
0
0