முடிஞ்சுபோச்சு.. ’இந்தியன் 3’ நாள் குறித்த ஷங்கர்.. கதறும் ரசிகர்கள்!
Author: Hariharasudhan16 January 2025, 1:26 pm
இந்தியன் 3 பணிகள் தொடங்கினால் அடுத்த ஆறு மாதங்களில் படம் தயாராகிவிடும் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
சென்னை: இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் முடிந்துவிட்டதால் இந்தியன் 3 படத்தை தொடங்கிவிட வேண்டியது தான். இந்தியன் 3 பணிகள் தொடங்கினால், அடுத்த 6 மாதங்களில் திரைக்கு கொண்டு வந்துவிடலாம். அதில் கிராஃபிக்ஸ் பணிகள் அதிகமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில், கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய மாஸ் ஹிட் ஆன திரைப்படம் இந்தியன். இந்த நிலையில், மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படம் கடந்த ஆண்டு மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியானது.
ஆனால், படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் படுதோல்வியைச் சந்தித்தது. ஆனால், இந்தப் படத்தின் கதை அத்துடன் முடிவடையவில்லை. மேலும் இந்தியன் 3 படத்தின் டிரெய்லர் காட்சிகளும் இந்தியன் 2 இறுதியில் இணைக்கப்பட்டு இருந்தது.
அதேநேரம், லைகா நிறுவனம் – ஷங்கர் இடையே வணிக ரீதியான பிரச்னை உருவாகியுள்ளது. எனவே, இந்தப் பிரச்னைகளை பேசி முடித்தவுடன் தான் ‘இந்தியன் 3’ பணிகள் தொடங்கப்படக் கூடிய நிலையும் உருவாகியுள்ளது. இதற்கு அமெரிக்காவில் இருந்து கமல் இந்தியா திரும்ப வேண்டும் என்பதால், படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு…. அமைச்சர் மீது நீலம் பண்பாடு மையம் பகீர் குற்றச்சாட்டு!!
மேலும், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோரது நடிப்பில் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் கேம் சேஞ்ஜர். இப்படமும் கலவையான விமர்சனங்களையேப் பெற்று வருகிறது. இவ்வாறு ஷங்கர் தொடர்ந்து தோல்வி முகத்திலே இருப்பதால், இந்தியன் 3 குறித்தான தகவலால் கலக்கத்தி உள்ளனர்.