சினி அப்டேட்ஸ்

மரியா 45 வயது பெண்ணா? வயசுக்கு வந்த மகள் வேறு – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் ஷாரிக்!

நடிகர் ரியாஸ் கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன் பெரும்பாலான தமிழ் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலம் ஆனார். இவர் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பலமொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் சுறா, ஆதவன், திருப்பதி, கஜினி , வின்னர், பாபா உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார் . இதனிடையே பழம்பெரும் நடிகையான கமலா காமேஷின் மகளான உமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு “ஷாரிக்” என்கிற ஒரு மகன் இருக்கிறார். கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி போட்டியாளராக ஷாரிக் பங்கேற்றார். கிட்டத்தட்ட 49 நாட்கள் அந்த வீட்டில் இருந்த ஷாரிக்அதன் பின்னர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வந்த மகன் ஷாரிக்கிற்கு அண்மையில் நீண்ட நாள் காதலி மரியா என்பருடன் திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த நட்சத்திர பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் கழித்து ஷாரிக் தனது மனைவி மரியாவுடன் பிரபல தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் பல அதிர்ச்சியான விஷயங்களை அவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

அதாவது, மரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்றும் அவருக்கு ஏற்கனவே வயதுக்கு வந்த ஒரு மகள் இருக்கிறார் என்ற தகவலையும் தெரிவித்தார்கள். இதை தெரிந்தும் கூட ஷாரிக் என்னை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

அவர்களது தந்தையான ரியாஸ் கான் மற்றும் அவங்க அம்மா உமா ரியாஸ் இவங்க ரெண்டு பேருமே எங்களோட காதலை ஏற்றுக்கொண்டார்கள். மிகச்சிறந்த மனிதர் ஷாரிக் என மரியா பேட்டியில் பேசியிருந்தார். அது மட்டும் இல்லாமல் மனைவி மரியாவிற்கு 45 வயதாக தான் ஆகிறது. ஷார்க்கிற்கு 29 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 16 வயது வித்தியாசத்துடன் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணை 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை ஏற்கனவே வயதுக்கு வந்த மகள் இருக்கும் நிலையிலும் ஷாரிக் அவரை திருமணம் செய்து கொண்டு இவ்வளவு மரியாதையாக நடத்துவதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களது பெற்றோரான ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸ் இருவரும் சிறப்பான முறையில் வளர்த்திருக்கிறார்கள். இப்படியே வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழுங்கள் என வாழ்த்தி வருகிறார்கள். இந்த தம்பதியரின் பேட்டி தான் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்கள் முழுக்க வைரலாகி வருகிறது.

Anitha

Recent Posts

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

40 minutes ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

60 minutes ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

2 hours ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

2 hours ago

குட் பேட் அக்லி திரைப்படம் இப்படிப்பட்ட கதையம்சம் கொண்டதா? சந்தேகத்தை கிளப்பிய பிரபலம்..

வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

3 hours ago

2ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோருக்கு தனியார் பள்ளி மிரட்டல்.. TC வாங்க மிரட்டி ஒப்பந்தம்!

கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…

3 hours ago

This website uses cookies.