Tissue பேப்பர எடுத்து வைங்க.. மீண்டும் முன்னணி நடிகருடன் சிவாண்ணா!

Author: Hariharasudhan
13 November 2024, 11:57 am

கன்னட நடிகர் சிவராஜ் குமார், விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: தான் கமிட் ஆகி உள்ள படங்களை முடித்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக, தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்குவதற்கான அறிவிப்பிலே விஜய் கூறியிருந்தார். அதன்படி, இறுதியாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இருப்பினும், இதுவும் மர்மமாகவே உள்ளது.

இவ்வாறு இந்தப் படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இதன்படி, கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்க, அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். அனிருத் கடைசியாக லியோ படத்தில் விஜய்க்கு இசை அமைத்திருந்தார். இந்தக் கூட்டணி கத்தி படம் முதலே தொடர்கிறது.

மேலும், இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் வாசுதேவ் மேனன், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், நரைன் மற்றும் மமிதா பைஜூ உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் பூஜை ஏற்கனவே போடப்பட்ட நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று மிரட்டலாக வெளியாகி உள்ளது.

இதன் அடிப்படையில், கன்னடத் திரையுலகான சேண்டல் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான (Sandalwood) சிவராஜ் குமார் என்ற சிவாண்ணா, தளபதி 69 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதனை சிவாண்ணாவே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

இது குறித்து சிவராஜ் குமார் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், “நான் எப்படி கமிட் ஆகி உள்ள அடுத்தடுத்த படங்களுக்காக நாட்களை ஒதுக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. ஏனென்றால், தளபதி விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் பேச்சுவார்த்தையும் என்னுடன் நடந்துள்ளது.

நான் உங்களுக்கு எக்ஸ்குளூசிவான செய்தியைக் கொடுத்து உள்ளேன். இதுதான் இன்றைய அப்டேட். மறுபக்கம், விஜய் ஒரு சிறந்த நடிகர் மற்றும் மிகுந்த மனிதத்தன்மை கொண்டவர். அவரது அரசியல் பயணம் உண்மையில் என்னை பிரமிக்க வைத்தது. அவருக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Vijay and Pooja

எனவே, அப்பாவே சொல்லிட்டாரா என்பது போன்று, சிவாண்ணாவே சொல்லிட்டார் என்பதை வைத்து, தளபதி 69 படத்தில் சிவராஜ் குமார் முக்கியமான ஒரு கதாபாத்திரத்திலோ அல்லது கேமியோ கதாபாத்திரத்திலோ நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால், அனிருத்தின் மிரட்டும் பின்னணி இசையில் சிவராஜ் குமார், தளபதி 69 படத்தில் எண்ட்ரி கொடுப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!

முன்னதாக, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்தில், சிவராஜ் குமார் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். டிஸ்யூ பேப்பரை வைத்து, மிகவும் குறைவான வசனங்கள் உடன், ஆக்ரோஷமான பார்வையுடன் நடித்து ரசிகர்களின் கைத்தட்டலை சிவராஜ் குமார் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், இறுதியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக நல்ல வசூலைப் பெற்ற திரைப்படம், விமர்சன ரீதியாக கலவையான கருத்துகளையேப் பெற்றது. ஆனால், தவெக முதல் மாநாட்டுக்குப் பிறகு விஜயின் ஹைப் இதுவரை குறையவில்லை.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 201

    0

    0